Ind Vs Ban: தோல்விகளை விட அதிக வெற்றி: 92 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைத்த இந்திய அணி

First Published Sep 22, 2024, 4:24 PM IST

வங்தேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோல்விகளை விட அதிக வெற்றியை பதிவு செய்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

Ashwin, Jadeja

வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியை வங்கதேசம் அவர்களின் சொந்த மண்ணில் 2 - 0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்ததால் இந்தியா, வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

Ind Vs Ban 1st Test Cricket

அதன்படி இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 287 ரன்களும் சேர்த்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 515 ரன்கள் எடுத்தால் என்ற இமால இலக்குடன் கலம் இறங்கியது.

Latest Videos


மண்ணின் மைந்தர்

இமாலய இலக்குடன் களம் இறங்கிய வங்கதேசம் அணிக்கு சென்னை மண்ணின் மைந்தர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து ஷாக் கொடுத்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில் 3ம் நாள் முடிவிலேயே அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. 4ம் நாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில், அவர்களை மூச்சி விடக்கூட இடம் கொடுக்காமல் அஸ்வினும், ஜடேஜாவும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தனர்.

India Vs Bangladesh

இறுதியில் அந்த அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் சதம் விளாசி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டதோடு இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Ind Vs Ban

வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் வெற்றி சாதாரணமானதக பார்க்கப்பட்டாலும் இந்த வெற்றி மிகப்பெரிய வரலாறை படைத்துள்ளது. அதனை நாம் தெரிந்துகொள்ள வரலாற்றில் சற்று பின்னோக்கி செல்லவேண்டும். அதன்படி கடந்த 1932ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய இந்திய அணி அதில் 158 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Ravichandran Ashwin

அதன் பின்னர் முதல் வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி சுமார் 20 ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. பின்னர் 1952ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மொத்தமாக 581 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 178 வெற்றியையும், 178 தோல்வியையும் பதிவு செய்து இருந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோல்வியை விட அதிக வெற்றியை இந்திய அணி பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.

click me!