முதல் டெஸ்டில் 23 ரன் அடித்து கெத்தாக உலக சாதனை படைத்த விராட் கோலி

First Published | Sep 21, 2024, 7:40 PM IST

வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி 23 ரன்கள் சேர்த்த நிலையில் உலக அரங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ரன் மெஷின் விராட் கோலி ரன் குவிப்பில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

ரன் மெஷின் விராட் கோலி முதல் இன்னிங்சில் 6 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 17 ரன்களும் எடுத்தார். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 23 ரன்கள் எடுத்த நிலையில் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதன்படி சொந்த மண்ணில் குறைவான போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Tap to resize

முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்களைக் எடுத்ததே சொந்த மண்ணில் குறைந்த போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையாக இருந்தது. ஆனால் இந்த சாதனையை விராட் கோலி 250 போட்டிகளுக்கும் குறைவான இன்னிங்சில் இந்த சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். 

அதன்படி 247வது இன்னிங்சை விளையாடிய விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கள், 269 இன்னிங்ஸ் விளையாடி சங்ககரா, 271 இன்னிங்சுடன் ஜேக்காலீஸ், 275 இன்னிங்சுடன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் டாப் 5 இடங்களில் உள்ளனர்.

அதே போன்று சொந்த மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், காலீஸ், குமார் சங்ககரா வரிசையில் விராட் கோலி 5வது இடத்தில் உள்ளார்.

Latest Videos

click me!