ஐபிஎல்லில் ஆடும் முதல் அமெரிக்க வீரர்.. யார் இந்த அலி கான்..?

First Published Sep 13, 2020, 7:54 PM IST

ஐபிஎல்லில் ஆடப்போகும் முதல் அமெரிக்க கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று பெருமைக்குரிய வீரரான ஃபாஸ்ட் பவுலர் அலி கான் குறித்த சில முக்கியமான தகவல்களை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், கேகேஆர் அணியிலிருந்து இங்கிலாந்து வீரர் ஹாரிஸ் கர்னி விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக அமெரிக்க கிரிக்கெட் வீரரான அலி கான் கேகேஆர் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
undefined
அலி கான் ஐபிஎல்லில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்க கிரிக்கெட் வீரர். 29 வயதான ஃபாஸ்ட் பவுலர் அலி கான், 2018லிருந்தே கேகேஆர் அணி உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கி மைசூர் ஆகிய இருவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்துவந்ததுடன், கேகேஆர் அணியில் ஆட விரும்பியவரும் கூட.
undefined
அமெரிக்க கிரிக்கெட் வீரரான அலி கான், பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். 18வது வயதில் அமெரிக்காவிற்கு சென்று, அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, அமெரிக்காவிற்காக ஆடிவருகிறார்.
undefined
ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடியுள்ள அலி கான், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், கனடா க்ளோபல் டி20 லீக், அபுதாபி டி10 லீக், வங்கதேச பிரீமியர் லீக் உள்ளிட்ட உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார்.
undefined
கரீபியன் பிரீமியர் லீக்கில் 2016ம் ஆண்டு கயானா அமேசான் வாரியர்ஸ் அணியிலும், அதன்பின்னர் 2018லிருந்து இதுவரை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியிலும் ஆடிவருகிறார். அண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் டைட்டிலை வென்றது. அந்த அணியில் அலி கான் முக்கிய பங்கு வகித்தார். கரீபியன் பிரீமியர் லீக்கின் 2019 சீசனில் 10 விக்கெட்டுகளையும், இந்த சீசனில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
undefined
அலி கான் 17 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
undefined
click me!