2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள்; கரன் பிரதர்ஸ் கம்பேக்.. ஆஸி., அணியில் அதிர்ச்சி

First Published Sep 13, 2020, 5:41 PM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
undefined
2வது போட்டி இன்று மான்செஸ்டரில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன், முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்துள்ளார்.
undefined
இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆடவில்லை. முதல் போட்டிக்கு முந்தைய பயிற்சியின்போது தலையில் அடிபட்டதால் கன்கசனில் இருந்த ஸ்மித், 2வது கன்கசன் டெஸ்ட்டில் தேறினார். ஆனாலும் அவரது ஃபிட்னெஸை கருத்தில் கொண்டு இந்த போட்டியிலும் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
undefined
எனவே இந்த போட்டியிலும் அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோய்னிஸே மூன்றாம் வரிசையில் இறங்கவுள்ளார். கடந்த போட்டியில் அவர் 3ம் வரிசையில் நன்றாகத்தான் ஆடினார். அதிரடியாக ஆடி 34 பந்தில் 43 ரன்கள் அடித்தார்.
undefined
ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் ஆடிய அதே அணி காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது. ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.ஆஸ்திரேலிய அணி:ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
undefined
இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொயின் அலி மற்றும் மார்க் உட் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, கரன் சகோதரர்கள்(டாம் கரன், சாம் கரன்) ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
இங்கிலாந்து அணி:ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், டாம் கரன், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
undefined
click me!