Published : Feb 21, 2023, 11:29 AM ISTUpdated : Feb 21, 2023, 12:53 PM IST
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமணத்தைத் தொடர்ந்து மெஹ்ந்தி மற்றும் மஞ்சள் பூசி விளையாடும் ஹல்தி நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
ஹர்திக் பாண்டியாவிற்கும், பாலிவுட் நடிகையான நடாசா ஸ்டோன்கோவிச்சுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அதன் பிறகு ஜூலை 30 ஆம் தேதி இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் பிறந்தான்.
211
நடாசா ஸ்டோன்கோவிச் - ஹர்திக் பாண்டியா
மகன் பிறந்து 7 மாதம் கழித்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். உதய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் வைத்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா திருமணம் நடந்துள்ளது.
311
நடாசா ஸ்டோன்கோவிச் - ஹர்திக் பாண்டியா
அப்போது நாட்டையே அச்சுறுத்தி வந்த கொரோனா காரணமாக லாக்வுடன் போடப்பட்டிருந்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்தனர். தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடந்து வருகிறது. டெஸ்ட் தொடரில் இடம் பெறாத ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருந்து வருகிறார்.
411
நடாசா ஸ்டோன்கோவிச் - ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு மறுபடியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த 13 ஆம் தேதியே இவர்களது திருமண நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கியுள்ளது.
511
ஹர்திக் பாண்டியா திருமணம்
உதய்பூரில் 5 நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடந்த ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டோன்கோவிச் திருமண நிகழ்ச்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்து புதுமண தம்பதியினரை வாழ்த்தியுள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டோன்கோவிச் இருவரும் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளனர்.
611
ஹர்திக் பாண்டியா
பிப்.13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் மெஹந்தி, சங்கீதா நிகழ்ச்சியும், ஹல்தி எனப்படும் மஞ்சள் பூசும் விழாவும் நடந்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடந்துள்ளது.
711
ஹர்திக் பாண்டியா திருமணம்
இந்த திருமணம் குறித்து ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: 3 வருடங்களுக்கு முன்பு எடுத்த சபதத்தை புதுப்பித்து இந்த காதல் தீவில் காதல தினத்தை கொண்டாடினோம். எங்கள் அன்பைக் கொண்டாட எங்களுடன் எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இருப்பது உண்மையில் நாங்கள் பாக்கியவான்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
811
ஹர்திக் பாண்டியா
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வலம் வருகிறார். கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் அணி முதல் சீசனிலேயே டிராபியை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
911
மஞ்சள் பூசி விளையாடும் நிகழ்ச்சி
திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து மெஹந்தி நிகழ்ச்சியும், சங்கீத நிகழ்ச்சியும், மஞ்சள் பூசி விளையாடும் ஹல்தி நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்துள்ளது. சங்கீத நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியாவும் இணைந்து டான்ஸ் ஆடியுள்ளனர்.
1011
சங்கீத நிகழ்ச்சி
மெஹந்தி, சங்கீத் மற்றும் மஞ்சள் பூசி விளையாடும் புகைப்படங்களை ஹர்திக் பாண்டியா தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1111
மெஹந்தி நிகழ்ச்சி
திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து மெஹந்தி நிகழ்ச்சியும், சங்கீத நிகழ்ச்சியும், மஞ்சள் பூசி விளையாடும் ஹல்தி நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்துள்ளது. சங்கீத நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியாவும் இணைந்து டான்ஸ் ஆடியுள்ளனர்.