#AUSvsIND கட்டைய போட்டு காரியத்தை சாதித்த ஹனுமா விஹாரி - அஷ்வின்..! செம கடுப்பான ஆஸி., சிட்னி டெஸ்ட் டிரா

First Published Jan 11, 2021, 1:02 PM IST

ஆஸி.,க்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. கடந்த 7ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது.
undefined
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில், ஷுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் அரைசதம் அடித்திருந்தாலும், சரியாக ஐம்பது ரன்களில் அவுட்டாகி பெரிய இன்னிங்ஸ் ஆட தவறியதால் முதல் இன்னிங்ஸில் வெறும் 244 ரன்கள் மட்டுமே அடித்தது.
undefined
முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும்போது மிட்செல் ஸ்டார்க்கின் பவுன்ஸரில் இடது கை கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் 2வது இன்னிங்ஸில் ஜடேஜா ஆடவில்லை.
undefined
94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி, தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் புகோவ்ஸ்கியின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்துவிட்டாலும், பின்னர் ஸ்மித் மற்றும் லபுஷேன் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடினர். லபுஷேன் 73 ரன்களும், ஸ்மித் 81 ரன்களும் அடித்தனர். மேத்யூ வேட் 4 ரன்களுக்கு நடையை கட்டினார். அதன்பின்னர் கேப்டன் டிம் பெய்னும் கேமரூன் க்ரீனும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடினர். அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்து சதத்தை நோக்கி ஆடிய கேமரூன் க்ரீன் 84 ரன்களுக்கு பும்ராவின் பந்தில் ஆட்டமிழக்க, அத்துடன் 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸி., அணி. டிம் பெய்ன் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
undefined
மொத்தமாக ஆஸி., அணி 406 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 407 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்களை சேர்த்து கொடுத்தனர். கில் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 52 ரன்களுக்கு ரோஹித் ஆட்டமிழந்தார். 98 பந்தில் 52 ரன்கள் அடித்தார் ரோஹித் சர்மா.
undefined
4ம் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்த ரஹானேவும் புஜாராவும் கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். ரஹானே களத்திற்கு வந்ததுமே 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் இலக்கை விரட்டும் முனைப்பில் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து 118 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் அடித்த ரிஷப் பண்ட், 3 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
undefined
ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த பின்னர், ரன் வேகம் குறைந்தது. புஜாராவும் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் 89வது ஓவரில் புஜாரா ஆட்டமிழந்தார். ஜடேஜாவும் காயத்தால் 2வது இன்னிங்ஸில் ஆடாததால், இனிமேல் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்த ஹனுமா விஹாரி, போட்டியை டிரா செய்யும் முனைப்பில் விக்கெட்டை இழந்துவிடாமல் தடுப்பாட்டம் ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அஷ்வினும் விக்கெட்டை இழந்துவிடாமல் தடுப்பாட்டம் ஆடினார். இந்த ஜோடியை பிரித்தால் தான் வெற்றி வாய்ப்பு என்பதால், ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், நேதன் லயன் ஆகிய ஆஸி., பவுலர்கள் எவ்வளவோ கடுமையாக போராடினர். ஆனால் ஹனுமா விஹாரியும் அஷ்வினும் அதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை.
undefined
vihari ashwin
undefined
click me!