பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்தது. இதில், நேற்று நடந்த 18ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிராம்சிம்ரன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார். இதே போன்று கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
அதன்பிறகு வந்த மேத்யூ ஷார்ட் மட்டும் நிதானமாக ஆடி 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த பின் வரிசை வீரர்கள் ஜித்தேஷ் ஷர்மா 25 ரன்னும், சாம் கரண் 22 ரன்னும், ஷாருக்கான் 22 ரன்னும், ராஜபக்சே 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ்
பந்து வீச்சைப் பொறுத்த வரையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மொகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் கைப்பற்றிய ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரண் விக்கெட்டுகள் மிகவும் முக்கியமான விக்கெட்டுகள். முகமது ஷமி, அல்ஜாரி ஜோசஃப், ரஷீத் கான், ஜோஷுவா லிட்டில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
மோகித் சர்மா
பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். சகா 30 ரன்னில் ரபாடா ஓவரில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அதிரடியா ஆடி 67 ரன்கள் சேர்த்து சாம் கரண் பந்தில் கிளீன் போல்டானார்.
பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
அதன் பிறகு வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 19 ரன்களில் வெளியேறினார். கடையாக டேவிட் மில்லர், ராகுல் திவேதியா ஆகியோர் கடைசி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக 19.5 ஆவது ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் எந்த் அணியிலும் மோகித் சர்மா ஏலம் எடுக்கப்படவில்லை. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மூலமாக ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், முதலில் நடந்த 3 போட்டிகளில் மோகித் சர்மா இடம் பெறவில்லை. நேற்று நடந்த போட்டியின் மூலமாக அணியில் இடம் பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் மூலமாக முதல் முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் - மோகித் சர்மா
இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அந்த ஆண்டு விளையாடினார். 2020 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ50 லட்சம் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக விளையாடினார்.
மோகித் சர்மா
அதன் பிறகு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில், தான் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கம்பீரமாக திரும்ப வந்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய மோகித் சர்மாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.