IPL 2023: ஒரு கேப்டனாக நீங்கள் அப்படி செய்திருக்க கூடாது; ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்!

First Published | Apr 14, 2023, 3:57 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்தது. இதில், நேற்று நடந்த 18ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. 

குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிராம்சிம்ரன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார். இதே போன்று கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Tap to resize

குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா

அதன்பிறகு வந்த மேத்யூ ஷார்ட் மட்டும் நிதானமாக ஆடி 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த பின் வரிசை வீரர்கள் ஜித்தேஷ் ஷர்மா 25 ரன்னும், சாம் கரண் 22 ரன்னும், ஷாருக்கான் 22 ரன்னும், ராஜபக்சே 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா

பந்து வீச்சைப் பொறுத்த வரையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மொகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் கைப்பற்றிய ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரண் விக்கெட்டுகள் மிகவும் முக்கியமான விக்கெட்டுகள். முகமது ஷமி, அல்ஜாரி ஜோசஃப், ரஷீத் கான், ஜோஷுவா லிட்டில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா

பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். சகா 30 ரன்னில் ரபாடா ஓவரில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அதிரடியா ஆடி 67 ரன்கள் சேர்த்து சாம் கரண் பந்தில் கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 19 ரன்களில் வெளியேறினார். 

குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா

கடையாக டேவிட் மில்லர், ராகுல் திவேதியா ஆகியோர் கடைசி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக 19.5 ஆவது ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா

என்னதான் இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் ஜெயித்திருந்தாலும் ஒரு கேப்டனாக உரிய நேரத்திற்குள் பந்துவீசாததால் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியையும் 3 மணி நேரம் 20 நிமிடங்களில் முடிக்க ஐபிஎல் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

ஹர்திக் பாண்டியா

ஆனால், போட்டியானது, மெதுவாக பந்து வீசுவதன் காரணமாக 4 மணிநேரத்திற்கும் மேலாக செல்வதால் போட்டிகளில் சிக்கல் ஏற்படுகிறது. ஆதலால், உரிய நேரத்திற்குள் பந்து வீசாததால் ஐபிஎல் நடத்தை விதிகளின்படி அவரது அணி செய்த முதல் குற்றமாக இதனை கருதி ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று ஐபிஎல் ஊடக ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா

இதற்கு முன்னதாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிள்சிஸ்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Latest Videos

click me!