GT vs SRH IPL 2025 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.
அகமதாபாத் மைதானம்: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
GT vs SRH IPL 2025 : குஜராத்தின் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 51ஆவது லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக சன்ரைசர்ஸ் அணி அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது சாய் சுதர்சன், சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரது அதிரடியால் எளிதாக 224/6 ரன்கள் குவித்தது.
29
குஜராத் டைட்டன்ஸ் 224 ரன்கள் குவிப்பு
இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பவுலிங் மற்றும் பீல்டிங் சரியில்லை. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் மற்றும் ஜீஷன் அன்சாரி ஒரு விக்கெட் எடுத்தார். இதையடுத்து 225 ரன்களை இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்தது. ஐபிஎல் 2025 தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் திகழந்தது.
39
சொதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்:
இந்த அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா என்று பலம் வாய்ந்த் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆனால், இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவைத் தவிர மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், ஹெட் 20 ரன்கள் எடுத்த நிலையில் பிரஷித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த நம்பிக்கை நட்சத்திரமான இஷான் கிஷான் ஒரு போட்டியில் மட்டும் சதம் அடித்த நிலையில் மற்ற எல்லா போட்டிகளிலும் சொதப்பி வந்தார். அதே போன்று இன்றைய போட்டியிலும் 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
59
கிளாசென் 23 ரன்கள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசென் தன் பங்கிற்கு 23 ரன்களில் நடையை கட்டினார். அனிகேத் வர்மா 3, கமிந்து மெண்டிஸ் 0 என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை நின்ற நிதிஷ் ரெட்டி 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 19 ரன்கள் சேர்த்தார்.
69
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 186/6 ரன்கள் எடுத்தது
இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 186/6 ரன்கள் மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி கிட்டத்தட்ட ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை.
79
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீதமுள்ள போட்டிகள்
எஞ்சிய 4 போட்டிகளில் முறையே டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.
89
குஜராத் டைட்டன்ஸ்:
இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டனர். சிறப்பாக பந்து வீசிய பிரஷித் கிருஷ்ணா இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செயப்பட்டார். அவர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இஷாந்த் சர்மா மற்றும் ஜெரால்டு கோட்ஸி தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.
99
ஜிடி எஞ்சிய 4 போட்டிகள்
ஜிடி எஞ்சிய 4 போட்டிகளில் முறையே மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.