#AUSvsIND இந்த 3 பேரையும் தூக்கிட்டு அவங்கள சேருங்க+கோலி, ஷமிக்கு மாற்றுவீரர்கள்! இந்தியா XI கம்பீர் செலக்‌ஷன்

First Published Dec 22, 2020, 2:11 PM IST

ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது போட்டி(பாக்ஸிங் டே டெஸ்ட்) வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியின் படுமோசமான பேட்டிங்கால் தான் தோற்க நேரிட்டது. குறிப்பாக 2 இன்னிங்ஸ்களிலும் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்த பிரித்வி ஷாவின் மோசமான பேட்டிங் டெக்னிக்கால் அதிருப்தியடைந்த முன்னாள் வீரர்கள் பலரும், பிரித்வி ஷாவை நீக்கிவிட்டு ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.
undefined
அந்தவகையில், முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் அதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஆடும் லெவனை தேர்வு செய்துள்ள கம்பீர், பிரித்வி ஷா தற்போதைய சூழலில் மோசமான ஃபார்மில் இருப்பதால், அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்க வேண்டும்.
undefined
அதேபோல விக்கெட் கீப்பராக, ரிதிமான் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கம்பீர். ஹனுமா விஹாரிக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள கம்பீர், காயத்தால் தொடரிலிருந்து விலகிய ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமிக்கு பதிலாக நவ்தீப் சைனி அல்லது முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவரை சேர்க்குமாறு தெரிவித்துள்ளார். விராட் கோலி ஆடாததால் அவருக்கு பதிலாக ராகுல் தான் அடுத்த போட்டியில் ஆடுவார் என்றாலும், கோலியின் பேட்டிங் ஆர்டரில் ரஹானே இறங்குமாறும், ஐந்தாம் வரிசையில் ராகுல் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளார் கம்பீர்.
undefined
ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட்டுக்கு கம்பீர் தேர்வு செய்த இந்திய அணி:மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(கேப்டன்), கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனிமுகமது சிராஜ்.
undefined
click me!