#IPL2021Auction ஐபிஎல் வரலாற்றுலயே சிஎஸ்கேவின் பெஸ்ட் ஏலம் இதுதான்..!

First Published Feb 20, 2021, 1:58 PM IST

ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கேவின் மிகச்சிறந்த ஏலம் இதுதான் என்று முன்னாள் ஜாம்பவான் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறினாலும், கோர் டீம் வலுவாக இருப்பதால், சிஎஸ்கே அணி எந்தவித பதற்றமும் இல்லாமல் 14வது சீசனுக்கான ஏலத்தை எதிர்கொண்டது. கடந்த 18ம் தேதி சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி, வழக்கம்போலவே தங்களுக்கு தேவையான வீரர்கள் யார் யார் என்பதில் மிகத்தெளிவாக இருந்து, திட்டமிட்ட வீரர்களை செலக்ட்டிவாக எடுத்தது.
undefined
ஃபினிஷர் மற்றும் ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடிய ஆல்ரவுண்டர் என்ற முறையில் க்ளென் மேக்ஸ்வெல்லை எடுக்க ஆர்வம் காட்டியது சிஎஸ்கே. ஆனால் மேக்ஸ்வெல்லை எடுப்பதி உறுதியாக இருந்த ஆர்சிபியிடம், பணமும் நிறைய இருந்ததால் அந்த அணி மேக்ஸ்வெல்லை விட்டுத்தரவில்லை. அதனால் மேக்ஸ்வெல்லுக்கான போட்டியிலிருந்து விலகிய சிஎஸ்கே, இங்கிலாந்து ஸ்பின் ஆல்ரவுண்டர் மொயின் அலியை ரூ.7 கோடிக்கும், உள்நாட்டு வீரரான கிருஷ்ணப்பா கௌதமை ரூ.9.25 கோடிக்கும் எடுத்தது.
undefined
டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாராவை ரூ.50 லட்சத்திற்கு எடுத்த சிஎஸ்கே, தமிழகத்தை சேர்ந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹரி நிஷாந்த் உட்பட உள்நாட்டு இளம் வீரர்கள் மூவரை அவர்களது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது. வழக்கம்போலவே எந்தவித பதற்றமும் இல்லாமல் நிதானமாகவும் தெளிவாகவும் ஏலத்தை முடித்தது.
undefined
சிஎஸ்கே அணி ஏலத்தில் அலட்டிக்கொள்ளாமல் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் எடுத்திருந்தாலும், ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் சிஎஸ்கேவின் மிகச்சிறந்த ஏலம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல்லில் 2 முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டனுமான கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், மறுகட்டமைப்பு என்பது சிஎஸ்கேவை விட மற்ற அணிகளுக்குத்தான் அதிகம் தேவை. கடந்த சீசன் தான் சிஎஸ்கேவின் மோசமான சீசன்; பிளே ஆஃபிற்கு கூட முன்னேறவில்லை. ஆனாலும் 14வது சீசனுக்கான ஏலத்தில் வெறும் 3 வீரர்களை மட்டும் எடுத்துவிட்டு மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தனர் சிஎஸ்கே அணி நிர்வாகிகள். இதுதான் அந்த அணியின் பெஸ்ட் ஏலம். இதுமாதிரி தான் நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்கக்கூடிய அணியை கட்டமைக்க வேண்டும்.
undefined
ஆரம்பத்தில் மேக்ஸ்வெல்லை எடுக்க ஆர்வம் காட்டிய சிஎஸ்கே, அவரை எடுத்திருக்க வேண்டிய தொகையில் மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவரை எடுத்துவிட்டது. ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வீரர்களை அள்ளிக்கொண்டிருந்தபோது, சிஎஸ்கே தங்களுக்கு தேவையான சில வீரர்களை மட்டும் குறிப்பிட்டு எடுத்தது. அதுதான் நல்லது. பணத்தை வாரி இறைப்பதை விட, தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும்தான் எடுக்க வேண்டும். அந்தவகையில், சிஎஸ்கேவின் மிகச்சிறந்த ஏலம் இதுதான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!