ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக இது இருந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு கிராக்கி அதிகமாக இருந்ததால், கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜாமிசன்(ரூ.15 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி), மெரிடித்(ரூ.8 கோடி) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போனார்கள்.
வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்களுக்கு அதிக கிராக்கி இருந்த நிலையில், உள்நாட்டு ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் வெறும் ஒரு கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 140 கிமீ வேகத்தில் வீசக்கூடிய வெகுசில பவுலர்களில் உமேஷ் யாதவும் ஒருவர். அதுவும் இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் 140 கிமீ வேகத்தில் வீசுவது பெரிய விஷயம். அப்படியான வெகுசில இந்திய பவுலர்களில் உமேஷ் யாதவும் ஒருவர்.
ஆனால், ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட உமேஷ் யாதவை டெல்லி கேபிடள்ஸ் அணி, அவரது அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல்லில் 121 போட்டிகளில் ஆடி 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நல்ல அனுபவம் கொண்ட ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் வெறும் ஒரு கோடிக்கு ஏலம்போனது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள கம்பீர், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், உமேஷ் யாதவ் வெறும் ஒரு கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. வெகுசில ஃபாஸ்ட் பவுலர்களே 140 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர்கள். உமேஷ் யாதவ் நல்ல வேகமாக வீசக்கூடிய பவுலர். ஆனால் அவரை நிறைய அணிகள் அவரை எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் டெல்லி அணிக்கு மிகச்சரியான தேர்வு உமேஷ் யாதவ். இஷாந்த் சர்மாவின் ஃபிட்னெஸிலும் பிரச்னை இருக்கும் நிலையில், அனுபவ ஃபாஸ்ட் பவுலர் என்ற முறையில் உமேஷ் யாதவ் டெல்லி அணிக்கு சரியானவர் என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.