அவரை டீம்ல எடுக்காதது எனக்கே பெரிய வியப்புதான்..! அணி தேர்வை விமர்சித்த கம்பீர்

First Published Mar 17, 2021, 3:04 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவை எடுக்காததை கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இஷான் கிஷனும் சூர்யகுமார் யாதவும் அறிமுகமாகினர். 3வது டி20 போட்டியில் ரோஹித் சர்மா அணியில் இணைந்ததால் சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இஷான் கிஷன் 3ம் வரிசையில் இறக்கிவிட்டு கோலி 4ம் வரிசையில் இறங்கினார்.
undefined
2வது டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவுக்கு அந்த போட்டியில் பேட்டிங் ஆடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரேயொரு போட்டியில் சூர்யகுமாரை எடுத்துவிட்டு, ஆட வாய்ப்பே கொடுக்கப்படாத நிலையில், அடுத்த போட்டியில் ஓரங்கட்டப்பட்டார்.
undefined
இந்நிலையில், சூர்யகுமார் யாதவை ஓரங்கட்டியதை கம்பீர் விமர்சித்துள்ளார். இதுகுறித்த பேசியுள்ள கம்பீர், டி20 உலக கோப்பை நெருங்குகிறது. அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை வரும். இப்படியாக தொடர்ச்சியாக சர்வதேச தொடர்கள் இருக்கும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று மிடில் ஆர்டர் வீரர் ஒருவரை அணி செட்டப்பில் இணைக்க வேண்டியது அவசியம். சூர்யகுமார் யாதவிற்கு தொடர்ந்து 3-4 போட்டிகள் வாய்ப்பளிக்க வேண்டும். அவரை 3வது டி20 போட்டியில் ஆடவைக்காதது எனக்கே பெரும் வியப்பாகத்தான் இருந்தது என கம்பீர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!