IPL 2023: தோனிக்கு கோபம் வந்து பேட்டை தூக்கி எறிந்ததில் பேட் உடைந்துவிட்டது - ஹர்பஜன் சிங்!

Published : Apr 24, 2023, 12:48 PM IST

கோபத்தில் தோனி தனது பேட்டையே தூக்கி எறிந்து உடைத்திருக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

PREV
15
 IPL 2023: தோனிக்கு கோபம் வந்து பேட்டை தூக்கி எறிந்ததில் பேட் உடைந்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
எம்.எஸ்.தோனி

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தோனி என்றாலே கூல் கேப்டன் என்று அழைத்து வந்த நிலையில், தற்போது அவரை யாரும் கூல் கேப்டன் என்று அழைப்பதில்லை. மாறாக களத்தில் அளவுக்கு அதிகமாக கோபப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வளவு ஏன், பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் மொயீன் அலியை கூட திட்டிருப்பார்.

25
எம்.எஸ்.தோனி

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது தோனி பல முறை கோபம் கொண்டிருக்கிறார் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு நாள் நாங்கள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தின் போது தோனி கோபம் கொண்டது எங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

35
எம்.எஸ்.தோனி

ராஞ்சியில் சிஎஸ்கே வீரர்காள் இரண்டாக பிரிந்து எங்களுக்குள் விளையாடினோம். அதில் தோனியின் டீம் குறைந்த ரன்கள் எடுத்து பின்தங்கியிருந்தது. கடைசியாக பேட்டிங் ஆடிய தோனி டிரெஸ்ஸிங் ரூம் வந்தார். அப்போது, அவர் தனது பேட்டை தூக்கி எறிந்தார்.

45
எம்.எஸ்.தோனி

இதில் பேட்டிலிருந்த கைப்பிடி உடைந்துவிட்டது. அந்தளவிற்கு தோனிக்கு கோபம் இருந்தது என்று அவர் கூறியுள்ளார். 4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 5ஆவது முறையாக அதற்கான முயற்சியில் இறங்கி விளையாடி வருகிறது. தற்போது வரையில் 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

55
எம்.எஸ்.தோனி

வரும் 27 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸின் கோட்டையான ஜெய்ப்பூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 8ஆவது போட்டியில் விளையாடுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories