IPL 2023: 26 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை: கொல்கத்தா கோட்டையில் 235 ரன்களை முத்திரை பதித்த சிஎஸ்கே!

First Published | Apr 24, 2023, 12:06 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 32ஆவது ஐபிஎல் போட்டி நடந்தது

சென்னை சூப்பர் கிங்ஸ்

இதில், டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் ஆடியது. ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். இதில், கெய்க்வாட் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கான்வே 56 ரன்களில் வெளியேறினார்.


சென்னை சூப்பர் கிங்ஸ்

இதையடுத்து ஜோடி சேந்த அஜின்க்யா ரஹானே மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை தெறிக்கவிட்டனர். இதில் துபே  21 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
 

சென்னை சூப்பர் கிங்ஸ்

அடுத்து வந்த ஜடேஜா 18 ரன்களில் வெளியேற கடைசியாக தல தோனி களமிங்கினார். அவர், 2 ரன்கள் எடுக்க கடைசி வரை களத்தில் இருந்த ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
 

சென்னை சூப்பர் கிங்ஸ்

இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. முதல் சாதனையாக ஒரு அணியாக இந்த சீசனில் அதிகபட்சமாக 235 ரன்கள் எடுத்துள்ளது. 
 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சிஎஸ்கே எடுத்துள்ள 3ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. இதே போன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு 5 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்துள்ளது.
 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் வரலாற்றில் 26 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்த அணி என்ற சாதனையை சிஎஸ்கே படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் மட்டும் சிஎஸ்கே அணி 18 சிக்ஸர்கள் விளாசியுள்ளது.
 

சென்னை சூப்பர் கிங்ஸ்

கடின இலக்கை துரத்திய கொல்கத்த அணி கடைசி வரை போராடி 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 5 ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. 
 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றி பெற்று 8ஆவது இடத்தில் உள்ளது.
 

சென்னை சூப்பர் கிங்ஸ்

வரும் 27 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸின் கோட்டையான ஜெய்ப்பூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 8ஆவது போட்டியில் விளையாடுகிறது.

Latest Videos

click me!