தோனியைப் பற்றி யாருக்கும் தெரியாத உண்மையை போட்டு உடைத்த ஆகாஷ் சோப்ரா: என்ன உண்மை தெரியுமா? சைவமா? அசைவமா?

First Published | Sep 17, 2024, 10:44 AM IST

MS Dhoni and Aakash Chopra: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, தோனியைப் பற்றிய ஒரு அறியப்படாத தகவலை வெளியிட்டுள்ளார். சைவ உணவுப் பிரியரான சோப்ராவுக்காக, தோனி ஒரு மாத காலம் அசைவ உணவைத் தியாகம் செய்தாராம்.

MS Dhoni Non Veg

வீரேந்திர சேவாக் உடன் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடியவர் ஆகாஷ் சோப்ரா. 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று விளையாடினார். 2003 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால், அவர் நீண்ட நாட்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெறவில்லை. 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 437 ரன்கள் எடுத்தார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார்.

Aakash Chopra and MS Dhoni

ஆனால், ஆகாஷ் சோப்ராவிற்கு பிறகு தான் எம்.எஸ்.தோனி இந்திய அணியில் இடம் பெற்றார். 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஆனால், ஆகாஷ் சோப்ரா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் ஒன்றாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. இருந்த போதிலும் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய போது இருவரும் சக வீரர்களாக இருந்துள்ளனர்.

Latest Videos


MS Dhoni, Indian Cricket Team

அதனால் தான் என்னவோ ஆகாஷ் சோப்ரா மீது தோனி எல்லையில்லா அன்பு வைத்திருக்கிறார். அது என்னது என்றால், ஆகாஷ் சோப்ரா ஒரு சைவம். அவருக்காக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தோனி அசைவம் சாப்பிடாமல் இருந்துள்ளார். அது ஏன், எதற்காக என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாங்க…

தோனியைப் பற்றி யாரும் அறிந்திராத ஒரு உண்மைக் கதையை இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணையாளருமான ஆகாஷ் சோப்ரா வெளிப்படுத்தியுள்ளார். ஆகாஷ் சோப்ரா சைவ உணவு உண்பவர் என்பதால், தோனி ஒரு மாதத்திற்கு அசைவ உணவை தியாக செய்ததாக கூறியிருக்கிறார்.

MS Dhoni and Aakash Chopra

தோனியின் போன் அடிக்கடி ரிங் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால், தோனி அதற்கு பதிலளிக்கவில்லை. நான் அவரிடம் எப்போது தூங்குவீர்கள் என்று கேட்டேன். அதற்கு உங்களுக்கு எப்போது வசதியாக இருக்குமோ அப்போது நீங்கள் எல்லா லைட்டுகளையும் ஆஃப் செய்யுங்கள் என்றார். மேலும், அவர் ஒரு அசைவ உணவு பிரியர், நான் சைவம். ஆதலால் என்ன சாப்பிட வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், உங்களுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று என்னிடம் கூறினார். அவர் ரூம் சர்வீஸை ஒரு போதும் கூப்பிடவே இல்லை. அவர் வெட்கப்பட்டுக் கொண்டே இருந்தார். எனக்காக ஒரு மாதம் முழுவதும் அசைவ உணவை தியாகம் செய்து, வெறும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டார் என்று ராஜ் ஷமானி யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.

Aakash Chopra, Indian Cricket Team

இந்திய அணிக்காக 15 ஆண்டுகாலமாக விளையாடிய தோனி, 3 ஐசிசி டிராபிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளார். அதில், 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிகளை வென்று கொடுத்து பல சாதனைகளை படைத்துள்ளார். இதே போன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தோனி 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்ற ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

Aakash Chopra and MS Dhoni Roommates

தோனி எப்போதும் ஓய்வு பெறக் கூடாது என்பது ரசிகர்களின் எண்ணம். ஆனால், அவரது உடல் தகுதி மற்றும் காயம் ஆகியவற்றின் காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறார். இது குறித்து ஓய்வு தான் முடிவு செய்வார். எப்படியும் இன்னும் ஒரு சீசன் விளையாடி டிராபி வென்று கொடுத்த கையோடு ஓய்வு பெறுவார் என்று எண்ணம் தோன்றுகிறது.

click me!