சுப்மன் கில்லை உடனே தூக்குங்க! கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு!

Published : Dec 12, 2025, 06:15 AM IST

ரசிகர்களின் கொந்தளிப்புக்கு நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்கும் சுப்மன் கில், இந்த ஆண்டு விளையாடிய 14 T20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 

PREV
14
இந்திய அணி படுதோல்வி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 213 ரன்கள் குவித்தது. பின்பு ஆடிய இந்திய அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

படுமோசமான பேட்டிங் பார்மில் உள்ள இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். லுங்கி நிகிடி வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்லிப்பில் ஹென்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

24
சுப்மன் கில்லின் படுமோசமான பேட்டிங்

டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமாக ஆடி வரும் சுப்மன் கில்லை உடனே இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மோசமாக விளையாடும் கில்லுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

 ஆனால் வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் தனது திறமையை நிரூபித்த சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் ஆவேசமாக உள்ளனர்.

34
14 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட இல்லை

ரசிகர்களின் கொந்தளிப்புக்கு நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்கும் சுப்மன் கில், இந்த ஆண்டு விளையாடிய 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மூன்று முறை மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 47 ரன்கள். 

இந்த ஆண்டு இதுவரை 23 சராசரி மற்றும் 143.71 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 263 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 13 இன்னிங்ஸ்களில் 20(9), 10(7), 5(8), 47(28), 29(19), 4(3), 12(10), 37*(20), 5(10), 15(12), 46(40), 29(16), 4(2), 0 (1) என மிக மோசமான ஸ்கோர்களை சுப்மன் கில் பதிவு செய்துள்ளார்.

44
சஞ்சு சாம்சன் உள்ளிட்ட திறமையான வீரர்கள் புறக்கணிப்பு

ஆனாலும் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பது ஏன்? என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. இந்த தொடரிலும் முதல் போட்டியில் 4 ரன், 2வது போட்டியில் டக் அவுட் என கில் சொதப்பியுள்ளார். 

இந்திய அணியில் கவுதம் கம்பீரின் பாரபட்சமான நடவடிக்கையால் டி20 கிரிக்கெட்டில் சூப்பராக விளையாடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகிய திறமையான வீரர்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர். 

அதுவும் சஞ்சு சாம்சன் 3 டி20 சதத்தை வைத்துக் கொண்டு வெளியே ஓரமாக உட்கார்ந்து இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற திறமையான வீரர்களுக்கு இடம்கிடைக்க கவுதம் கம்பீர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories