EXPLAINER: பிக்பேஷ் லீக்கின் 3 புதிய விதிகள் Power Surge, X Factor Player, Bash Boost சொல்வது என்ன..?

First Published Nov 17, 2020, 5:31 PM IST

பிக்பேஷ் லீக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய விதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
 

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடரின் இந்த சீசன் வரும் டிசம்பர் 10ம் தேதி தொடங்குகிறது. தொடர் தொடங்கவுள்ள நிலையில், பவர்சர்ஜ், X Factor Player மற்றும் பேஷ் பூஸ்ட் ஆகிய 3 விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த விதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
undefined
பவர்சர்ஜ்:டி20 போட்டிகளில் பொதுவாக முதல் ஆறு ஓவர்கள் பவர்ப்ளே. பவர்ப்ளேயில் வெறும் 2 ஃபீல்டர்கள் மட்டுமே வட்டத்துக்கு வெளியே ஃபீல்டிங் செய்ய முடியும். ஆனால் பிபிஎல்லில் அறிமுகம் செய்யப்படும் பவர்சர்ஜ் விதியின்படி, இன்னிங்ஸின் முதல் 4 ஓவர்கள் மட்டுமே பவர்ப்ளே. எஞ்சிய 2 பவர்ப்ளே ஓவர்களை 10வது ஓவருக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த 2 ஓவர்கள் பவர்சர்ஜ் என்றழைக்கப்படும். இது பேட்டிங் அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
undefined
X-factor Playerஎக்ஸ் ஃபேக்டர் பிளேயர் என்ற விதியின் முலம் பிளேயிங் லெவனுடன் கூடுதலாக ஏற்கனவே இருந்த ஒரு மாற்று வீரருக்கு பதிலாக இப்போது 2 மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள முடியும். இந்த விதியை 2 அணிகளுமே ஆட்டத்தின் 10வது ஓவருக்கு மேல் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதில் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தின் 10வது ஓவருக்கு பிறகு இந்த மாற்று வீரர்களில் யாராவது ஒருவரை அணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இதிலும் ஒரு விதி இருக்கிறது. பந்துவீசும் அணி இந்த வசதியை உபயோகப்படுத்தும் பட்சத்தில் 10 ஓவர்கள் முடிவில் அதுவரை ஒரு ஓவருக்கு மேல் பந்துவீசியிருக்காத பந்துவீச்சாளருக்கு பதில் மாற்று வீரரைச் சேர்த்துக்கொள்ளமுடியும்.
undefined
பேஷ் பூஸ்ட்:பொதுவாக, வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்த விதியின் மூலம் ஒரு போட்டிக்கு 3 புள்ளிகள். வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகள். எஞ்சிய ஒரு புள்ளியை இரு அணிகளில் எந்த அணியும் பெற முடியும். அந்த ஒரு புள்ளி போனஸ் புள்ளி. 10 ஓவர் முடிவில் இரு அணிகளில் எந்த அணி கூடுதல் ரன்னை பெறுகிறதோ, அந்த அணிக்கே அந்த போனஸ் புள்ளி.
undefined
click me!