ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடையும் இங்கிலாந்து.. அசத்தும் ஆஸி., பவுலர்கள்: சொதப்பும் இங்கி., பேட்ஸ்மேன்கள்

First Published Sep 13, 2020, 8:38 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்துவிட்டது.
 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
undefined
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 7 பந்தில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் மிரட்டலான வேகத்தில் ஆட்டமிழந்தார்.
undefined
இதையடுத்து ஜேசன் ராயுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். நல்ல டச்சில் சிறப்பாக தொடங்கிய ஜேசன் ராய் 4 பவுண்டரிகளுடன் 22 பந்தில் 21 ரன்கள் அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், 7வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
undefined
அதன்பின்னர் ஜோ ரூட்டுடன் கேப்டன் இயன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். ஃபார்மில் இல்லாததால், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ரூட், ஒருநாள் போட்டிகளிலும் சொதப்புகிறார். முதல் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. இந்த போட்டியிலும் மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடினார். 73 பந்துகளை எதிர்கொண்ட போதிலும், கிடைத்த ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், வெறும் 39 ரன்களில் ஆடம் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார்.
undefined
அதன்பின்னர் பட்லர் 3 ரன்களிலும் கேப்டன் மோர்கன் 42 ரன்களிலும், கடந்த போட்டியில் சதமடித்த சாம் பில்லிங்ஸ் வெறும் 8 ரன்னிலும், சாம் கரன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 38 ஓவரில் வெறும் 143 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கிறிஸ் வோக்ஸும் டாம் கரனும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.
undefined
click me!