
Top 5 Cricketers Never Got Run Out in Test Cricket: கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முறை கூட ரன் அவுட் ஆகாத கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், நீங்கள் நம்புவீங்களா? ஆனால், அது தான் உண்மை. தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என்று எல்லோருமே ஒரு முறை கூட ரன் அவுட் ஆகியிருப்பார்கள். ஆனால், ஒரு முறை கூட ரன் அவுட் ஆகாத கிரிக்கெட் வீரர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பற்றி தான் பார்க்கலமா? வாங்க…
கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் எப்போது என்ன நடக்கும் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. கடைசி நிமிட கிரிக்கெட்டில் கூட சில மாற்றங்கள் த்ரில் நடக்கும். கடைசி பந்து வரை பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். கடைசி பந்தில் ஜெயித்த போட்டிகள் இருக்கிறது. கடைசி பந்தில் தோற்ற அணிகளும் இருக்கிறது. 1 ரன், 1 விக்கெட்டில் ஜெயித்த போட்டியும் உண்டு. இப்படி பரபரப்பான கிரிக்கெட் விளையாட்டில் இன்னும் முறியடிக்கப்படாத பல சாதனைகள் ஏராளமாக உள்ளன.
அவற்றில் சில இன்னும் ஆச்சரியமாக உள்ளன. கிரிக்கெட் வரலாற்றில் 5 சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் டெஸ்ட் வடிவத்தில் ஒரு முறை கூட ரன் அவுட் ஆகவில்லை. அவர்கள் யார் யார் என்று பார்க்கலாம். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஒருவரும் இருக்கிறார். அவரைப் பற்றியும் பார்க்கலாம்.
கிரஹாம் ஹிக்:
ஜிம்பாப்வேயில் பிறந்தவரான கிரஹாம் ஹிக், இங்கிலாந்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். 65 டெஸ்ட் மற்றும் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 3000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கிரஹாம் ஹிக் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட ரன் அவுட் ஆகவில்லை. இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கிரஹாம் தனித்து விளையாடி பல போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்திருக்கிறார்.
கபில் தேவ்:
இந்திய ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் இந்த பெயரை மறந்துவிட முடியாது. இந்திய அணிக்கு முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 175 ரன்கள் குவித்தார். ஆட்டமிழக்கவில்லை.
பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு பெயர் போன கபில் தேவ் இந்தியாவிற்காக 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 சதம், 27 அரைசதங்கள் உள்பட 5,248 ரன்கள் எடுத்துள்ளார். அதே போன்று 23 முறை 5 விக்கெட்டுகள் உள்பட 434 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3783 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 14 அரைசதங்கள் அடங்கும். மேலும், அதிகபட்சமாக 175 ரன்கள் எடுத்துள்ளார். 253 விக்கெட்டுகளை எடுத்தார். கபில்தேவ் தனது முழு டெஸ்ட் வாழ்க்கையில் ரன் அவுட்டே ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பால் கோலிங்வுட்:
இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் பால் கோலிங்வுட். ஒரு கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றிருக்கிறார். 3 வடிவ கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் இடம் பெற்று விளையாடியுள்ளார். இவரது தலைமையில் இங்கிலாந்து 2010 டி20 உலகக் கோப்பையை வென்றது. இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட ரன் அவுட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பீட்டர் மே:
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த பேட்ஸ்மேனுமான பீட்டர் மே தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட ரன் அவுட் ஆகவில்லை. இதன் மூலமாக தான் ஒரு மிகவும் உன்னதமான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சிறந்த கேப்டனாகவும் அணியை வழிநடத்தியிருக்கிறார்.
1951 மே மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூலமாக இங்கிலாந்து அணியில் பீட்டர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். பீட்டர் மே மொத்தமாக 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 சதங்கள் உட்பட 4537 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 235 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட்டுகளுக்கு நடுவில் வேகமாக ஓடக் கூடியவர். ஆதலால் தான் ஒரு முறை கூட ரன் ஆகவில்லை.
முடாசர் நாசர்:
பாகிஸ்தான் எத்தனையோ வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வந்திருக்கிறது. ஆனால், ஒரு சிறந்த பேட்ஸ்மேன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்திருக்கிறாரா என்று கேட்டால், ஆம், இருந்திருக்கிறார் அவர் வேறுமில்ல முடாசா நாசர் தான். கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட அவர் ரன் அவுட் ஆகவில்லை.
76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 சதங்கள் உள்பட 4114 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2653 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இடம் பெற்றிருக்கிறார்.