Irani Trophy 2024, Shreyas Iyer
ஐபிஎல் 2024 மற்றும் ரஞ்சி டிராபியைத் தொடர்ந்து இராணி டிராபியை வென்ற மும்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்று வெற்றியை கொண்டாடியுள்ளார். அஜின்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணியானது 27 ஆண்டுகளுக்கு பிறகு இராணி டிராபியை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
இராணி டிராபி தொடரில் ரெஸ் ஆஃப் இந்தியா மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டி டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Shreyas Iyer, Irani Trophy 2024
அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது லக்னோவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 141 ஓவர்களில் 537 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கான் 286 பந்துகளில் 25 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 222 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று கேப்டன் ரஹானே 92 ரன்கள் எடுத்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்கள் எடுத்து கொடுத்தார். தனுஷ் கோட்டியன் 64 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரெஸ் ஆஃப் இந்தியா அணியில் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். யாஷ் தயாள் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Irani Trophy 2024 - Mumbai vs Rest of India
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியானது, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்தது. இதில், அபிமன்யூ ஈஸ்வரன் 191 ரன்கள் எடுத்தார். 9 ரன்களில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதே போன்று, துருவ் ஜூரெல் 93 ரன்கள் குவித்தார். இஷான் கிஷான் 38 ரன்களில் வெளியேறினார்.
Mumbai vs Rest of India, Shreyas Iyer
பின்னர் மும்பை 2ஆவது இன்னிங்ஸ் விளையாடி 8 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்கள் குவித்தது. இதில், பிரித்வி ஷா 76 ரன்களும், தனுஷ் கோட்டியன் 114 ரன்களும் எடுத்தனர். மோகித் அவஸ்தி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இரு அணிகளின் கேப்டன்களும் பேசிய நிலையில், போட்டி டிரா செயய்ப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Mumbai vs Rest of India, Ajinkya Rahane
இறுதியாக மும்பை 27 ஆண்டுகளுக்கு பிறகு இராணி டிராபி டிராபியை கைப்பற்றி சாதனை படைத்தது. இதே போன்று மும்பை 15ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய சர்ஃபரா கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.