Shivam Dube
முதுகு காயம் காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் ஷிவம் துபே விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை அக்டோபர் 6ஆம் தேதி குவாலியரில் உள்ள மாதவ்ராவ் சிந்தியா மைதானத்தில் இந்தியா-வங்கதேசம் தொடரின் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக, ஷிவம் துபே இந்த தொடரில் இல்லை என்பது தெரிந்தது. அவருக்கு பதிலாக இந்திய அணியில் திலக் வர்மா இடம் பெற்றுள்ளார். இது குறித்த அறிவிப்பை இன்று தேர்வாளர்கள் அறிவித்தனர்.
Shivam Dube Injury
பயிற்சியின் போது ஷிவம் காயமடைந்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அவரால் விளையாட முடியாது. சமீபத்தில், ஷிவம் இந்திய அணிக்காக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்தார். இப்போது அவர் காயம் காரணமாக வெளியேறியதால், திலக்கிற்கு தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இருப்பினும், ஷிவம் துபே பேட்டிங்கைப் போலவே பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு உதவ முடியும், ஆனால் திலக்கால் அதைச் செய்ய முடியாது. ஷிவம் துபேயின்ன் காயம் எந்த அளவுக்கு மோசமானது, அவர் எவ்வளவு காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்பது குறித்து பிசிசிஐ இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Tilak Varma, IND vs BAN T20 Series
ஐபிஎல் தொடரில் திலக்கின் சிறப்பான ஆட்டம்
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் திலக் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அதனால் தான் அவர் தேசிய அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் நாளை நடைபெறும் முதல் டி20 போட்டியில் திலக் வர்மா விளையாட வாய்ப்பில்லை. ஏனெனில், நாளை 6ஆம் தேதி காலைதான் திலக் குவாலியர் வந்து அணியில் இணைகிறார்.
21 வயதான திலக் வர்மா பெரிய ஷாட்களை விளையாடக் கூடியவர். டி20 கிரிக்கெட்டிற்கு ஏற்ற பேட்ஸ்மேன். வங்கதேசத்திற்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்தால், அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவ முடியும். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் வெளிப்படுத்திய ஆட்டத்தை வங்கதேசத்திற்கு எதிராக வெளிப்படுத்தினால், அணிக்கு பெரிய பலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Shivam Dube Back Injury
குவாலியரில் பலத்த பாதுகாப்பு
நாளை 6ஆம் தேதி குவாலியரில் இந்து மகாசபா பந்த் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான முதல் டி20 போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, குவாலியரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் கைப்பற்ற கடுமையாக போராடும். இதே போன்று தான் வங்கதேச புலிகளும். டெஸ்ட் தொடரை இழந்த வெறியோடு விளையாடி டி20 தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் டிராபி கைப்பற்றியதோடு தொடர்ந்து இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றி வருகிறது.