IPL 2025, MS Dhoni: தோனிக்கான என்ட்ரி சாங்காக நீ பொட்டு வச்ச பாடலை கேட்க ஆசைப்படும் சிஎஸ்கே ரசிகர்கள்!

First Published | Oct 5, 2024, 4:22 PM IST

ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே முன்னாள் அணியின் கேப்டன் தோனி களமிறங்கும்போது 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' பாடலை ஒலிக்கவிட ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

IPL 2025, Chennai Super Kings

விஜயகாந்த் நடிப்பில் வந்த பொன்மனச் செல்வன் படத்தில் இடம் ஒரே ஊரே விஜயகாந்தை கொண்டாடும் வகையிலான பாடம் இடம் பெற்றிருக்கும். அது தான் நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் என்ற பாடல். இந்தப் படம் வந்த போது டிரெண்டானதை விட தற்போது பட்டி தொட்டியெங்கும் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவின் டிரெண்ட் மாறி வரும் நிலையில், அந்த டிரெண்டிற்கு ஏற்ப பழைய பாடல்களும் புதிய படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாட்டு, கைதி படத்தில் வரும் ஆச அதிகம் வச்சு பாடல், வாழை படத்தில் இடம்பெற்ற மஞ்சள் பூசும், அழகிய லைலா, பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. மேலும், பிரபு தேவா நடிப்பில் வந்த ஏழையின் சிரிப்பில் இடம் பெற்றிருந்த கருகரு கருப்பாய் என்ற பாடலை லியோ படத்தில் விஜய் பாடி அதனை டிரெண்டாக்கி விட்டிருப்பார்.

IPL 2025, CSK

அந்த படம் வந்த போது டிரெண்டானதை விட இப்போது அந்த பாடல் டிரெண்டானதோடு, ரீல்ஸாகவும் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு பட்டிதொட்டியெங்கும் சென்றது. இதே போன்று தான் கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரைக்கு லப்பர் பந்து படத்திலும் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் டிரெண்டாகி உள்ளது. அந்த பாடல் தான் விஜயகாந்திற்கு மகுடம் சூடிய நீ பொட்டு வச்ச தங்க குடம் என்ற பாடல்.

Tap to resize

MS Dhoni Nee Pottu Vacha Thanga Kudam Song

விஜயகாந்தின் தீவிர ரசிகரான இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, குறிப்பிட்டு அந்த ஒரு பாடலை தனது படத்தில் இடம் பெறச் செய்து இன்றைய சினிமாவிற்கு அதனை டிரெண்டாக்கியுள்ளார். எங்கு பார்த்தாலும் நீ பொட்டு வச்ச தங்க குடம் என்ற பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலேயும் கிரிக்கெட்டுக்காக அந்த பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பை கொடுத்துள்ளது.

ஏனென்றால், இன்னும் 6 மாதங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் தொடங்குகிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Lubber Pandhu, IPL 2025, MS Dhoni

தோனி ஒருவருக்காகவே சிஎஸ்கேயை கொண்டாடும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் தோனி பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வரும் போது என்ட்ரி பாடல்கள் ஒலிக்கப்படும். இப்போது நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் என்ற விஜயகாந்த் பாடல் டிரெண்டான நிலையில் அதே பாடல் தோனிக்கும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி பேட்டிங் செய்ய வரும் போது நீ பொட்டு வச்ச தங்க குடம் என்ற பாடல் ஒலிப்பதை கேட்கவே இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து இப்போதே பேசி வருகின்றனர். சிஎஸ்கே அதற்காக தயாராகி வருகிறது.

Latest Videos

click me!