ஐபிஎல் 14வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இன்று மும்பையில் நடக்கும் 2வது போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.
கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மிகச்சிறப்பாக ஆடி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேபிடள்ஸ் அணி. ஆனால் இந்த சீசனில் காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாததால் ரிஷப் பண்ட் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தவுள்ளார். அனுபவம் வாய்ந்த தோனியின் கேப்டன்சியில் ஆடும் சிஎஸ்கே அணியை இளம் கேப்டனான ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் இன்று எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கும் டெல்லி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். பிரித்வி ஷா மற்றும் தவான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் ரஹானே, 4ம் வரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட்டும் இறங்குவார்கள். 5ம் வரிசையில் மார்கஸ் ஸ்டோய்னிஸூம், 6ம் வரிசையில் ஹிம்ரான் ஹெட்மயர்சாம் பில்லிங்ஸ் ஆகிய இருவரில் ஒருவரும் இறங்குவார்கள்.
அக்ஸர் படேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் ஆடமாட்டார். அஷ்வினுடன் மற்றொரு அனுபவ ஸ்பின்னரான அமித் மிஷ்ரா ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக இஷான் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் ஆடுவார்கள். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆடுவார். இஷாந்த், உமேஷுடன், ஆல்ரவுண்டர்களான வோக்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் பவுலிங் வீசுவார்கள் என்பதால் அணி நல்ல கலவையிலானதாக இருக்கும்.
கடந்த சீசனில் சிறப்பாக பந்துவீசி டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியான ரபாடா - நோர்க்யா ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் ஆடமாட்டார்கள். அவர்கள் இருவரும் குவாரண்டினை முடிக்காததால் இன்று ஆடமாட்டார்கள். இருவரும் இணைந்து கடந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக 52 விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் ஆடாதது டெல்லி அணிக்கு பாதிப்புதான் என்றாலும், சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களான இஷாந்த் சர்மாவும் உமேஷ் யாதவும் ஆடுவதால் டெல்லி அணிக்கு பிரச்னையில்லை.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:பிரித்வி ஷா, ஷிகர் தவான், அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர்சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், அஷ்வின், அமித் மிஷ்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.