#CSKvsDC இப்ப வாங்கடா போட்டு பார்க்கலாம்.! சிஎஸ்கே அணியின் மிரட்டலான ஆடும் லெவன்

First Published Apr 10, 2021, 1:36 PM IST

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இன்று மும்பையில் நடக்கும் 2வது போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.
undefined
கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடனேயே வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் ரெய்னாவின் கம்பேக், மொயின் அலியின் சேர்க்கை ஆகியவற்றால் மேலும் வலுப்பெற்றுள்ளது. இன்று நடக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
undefined
கடந்த சீசனில் தொடக்க வீரர்களாக இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவருமே தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் ரெய்னா, 4ம் வரிசையில் ராயுடு ஆகியோர் ஆடுவார்கள். 5, 6, 7 ஆகிய பேட்டிங் ஆர்டர்களில் தோனி, ஜடேஜா, சாம் கரன் ஆகியோர் சூழலுக்கு ஏற்ப இறங்குவார்கள்.
undefined
ஸ்பின்னராக ஜடேஜாவுடன், இம்ரான் தாஹிர் மற்றும் மொயின் அலி ஆகியோரும் ஆடுவார்கள். ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுவர். சாம் கரனும் ஃபாஸ்ட் பவுலிங் வீசுவார். எனவே 6 பவுலிங் ஆப்சன், 9 பேட்ஸ்மேன்களுடன்(ஷர்துல் தாகூரையும் சேர்த்து) வலுவான அணியாக களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.
undefined
உத்தேச சிஎஸ்கே அணி:ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜடேஜா, மொயின் அலி, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.
undefined
click me!