IPL 2023: தம்பி இனியும் உன்னை நம்புறது வேஸ்ட்.. DC அணியின் அதிரடி முடிவு! சான்ஸுக்காக ஏங்கும் வீரருக்கு இடம்

ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. 
 

இந்த சீசனில் படுமோசமாக ஆடி புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் இடங்களில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்று மோதுவதால் இரு அணிகளுக்குமே வெற்றி அவசியம். இதற்கு முன் ஆடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள டெல்லி கேபிடள்ஸ், 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்குமே வெற்றி முக்கியம் என்பதால் வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன.


இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளை தழுவினாலும் அந்த அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் செட் ஆகிவிட்டதால் காம்பினேஷனில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது.

ஆனால் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும். இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 47 ரன்கள் மட்டுமே அடித்து தொடர்ந்து சொதப்பிவரும் பிரித்வி ஷா நீக்கப்பட்டு, போதிய வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கிவரும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி கேபிடள்ஸ் அணியின் மிடில் ஆர்டர் தான் பலவீனமாக உள்ளது. வார்னர் தனிநபராக போராடுகிறார். மிடில் ஆர்டரில் அவருக்கு ஒத்துழைப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். எனவே மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படலாம். தொடக்க வீரராக வார்னருடன் ஃபிலிப் சால்ட்டை இறக்கலாம்.
 

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஹாரி ப்ரூக், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மயன்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.
 

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், லலித் யாதவ், அமான் கான், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா. 

Latest Videos

click me!