#ICCWTC ஃபைனல்: நியூசிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு..! காரணத்துடன் கூறும் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர்

First Published Jun 14, 2021, 5:20 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. சமபலம் வாய்ந்த இந்தியாவும் நியூசிலாந்தும் இந்த ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
undefined
ஃபைனலுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி நியூசிலாந்துக்கு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து கண்டிஷன் நியூசிலாந்துக்கு சற்று கூடுதல் சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றி நியூசிலாந்துக்கு பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.
undefined
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 55-45 என்ற விகிதத்தில் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு சற்று கூடுதலாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து பேசியுள்ள தீப்தாஸ் குப்தா, நியூசிலாந்துக்கு 55-45 என்ற விகிதத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதற்காக இந்தியா வெற்றி வாய்ப்பில் பின் தங்கியிருக்கிறது என்று அர்த்தமல்ல. இந்திய அணி பெரிதாக தவறு எதுவும் செய்யாமல் இயல்பான கிரிக்கெட்டை ஆட வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஒரே போட்டிதான். இது ஒரு தொடராக நடக்கவில்லை. எனவே நியூசிலாந்தை பொறுத்தமட்டில் அவர்களது உத்தி மிக எளிதானது. குழப்பிக்கொள்ளாமல் சிம்பிளாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஆடவேண்டும். அவர்களை பொறுத்தமட்டில் அவ்வளவுதான்.
undefined
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றியை தொடர்ந்து நியூசிலாந்து அணி நல்ல ஃப்ளோவில் உள்ளது. அணியின் சீனியர் வீரர்களான வில்லியம்சன், வாட்லிங்கிற்கு ஓய்வு கொடுத்து புத்துணர்ச்சியுடன் ஃபைனலில் இறக்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி நியூசிலாந்து அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணி அனைத்து பாக்ஸ்களையும் டிக் அடித்துள்ளது என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
undefined
click me!