Ashutosh Sharma, DC vs LSG IPL 2025 Match Results in Tamil : டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 4 ஆவது லீக் போட்டி இன்று நடைபெற்றது. ஐபிஎல் 2025 தொடர் ஆரம்பித்த ஒரு சில போட்டியிலேயே இந்த தொடரில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக தெரிந்துள்ளது. இந்தப் போட்டியில் 2ஆவதாக விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அஷூதோஷ் சர்மாவின் அதிரடியால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
DC vs LSG, Ashutosh Sharma, DC vs LSG IPL 2025 Match Results in Tamil
கடைசி வரை போராட்டம் நிறைந்த போட்டியாக இருந்தது. அஷுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால், 210 ரன்கள் இலக்கை 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி எட்டியது. இம்பாக்ட் பிளேயராக வந்த அஷுதோஷ் 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. அவரைத் தவிர, அறிமுக வீரர் விப்ராஜ் நிகம் 39 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். மறுபுறம், LSG அணியின் பலவீனம் தோல்விக்கு வழிவகுத்தது.
Delhi Capitals, Ashutosh Sharma, DC vs LSG
LSG அணி 210 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது
விசாகப்பட்டினத்தில் DC மற்றும் LSG அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், டெல்லி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. பேட்டிங்கில் நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 75 ரன்கள் எடுத்தார். மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 72 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.
DC vs LSG Live Score, Ashutosh Sharma, DC vs LSG IPL 2025 Match Results in Tamil
டெல்லி பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் கம்பேக் கொடுத்தனர்.
டெல்லி அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், விப்ராஜ் நிகம் மற்றும் முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
IPL 2025, Lucknow Super Giants, Ashutosh Sharma, DC vs LSG IPL 2025 Match Results in Tamil
1 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி
210 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணியின் தொடக்கம் சரியில்லை. 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் இம்பாக்ட் பிளேயராக வந்த அஷுதோஷ் சர்மா இன்னிங்ஸை கையாண்டார். முதலில் டிரிஸ்டன் ஸ்டப்ஸுடன் 48 ரன்கள் சேர்த்தார். பின்னர் விப்ராஜ் நிகமுடன் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். குல்தீப் உடன் இணைந்து 21 ரன்கள் சேர்த்தார். இதன் விளைவாக, அணி 19.3 ஓவர்களில் இலக்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் எட்டியது. அஷுதோஷ் 66 ரன்கள் எடுத்தார். விப்ராஜ் 39 ரன்கள், டிரிஸ்டன் 34 ரன்கள் மற்றும் அக்சர் படேல் 22 ரன்கள் எடுத்தனர்.
Ashutosh Sharma, DC vs LSG IPL 2025 Match Results in Tamil
LSG அணியின் பந்துவீச்சு
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளையும், திவேஷ் ராத்தி 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் செய்யப்பட்டது.
IPL 2025 , DC vs LSG, Ashutosh Sharma, DC vs LSG IPL 2025 Match Results in Tamil
கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூட டெல்லி கேபிடல்ஸ் முதல் ஓவரிலேயே 2 விக்கெட், அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் என்று 6.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்ததை வைத்து லக்னோ அணிதான் வெற்றி பெறும் என்று கணித்தனர். அதன் பிறகு அஷூதோஷ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகம் விளையாடியதைக் கண்டு சொன்னது தவறு என்று கூறி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறும் என்று கூறினர்.
DC vs LSG Match Results, IPL 2025
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னரே எங்களது ஏசியாநெட் நியூஸ் தமிழ் விளையாட்டு செய்திகளில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியிருந்தது.
Indian Premier League, IPL 2025, DC vs LSG Live Score, Rishabh Pant
அதே போன்று நேற்றைய சிஎஸ்கே மற்றும் மும்பை போட்டிகள் தொடர்பாக ஏசியாநெட் நியூஸ் தமிழ் யூடியூப் சேனலில் மும்பை 140 ரன்கள் எடுக்கும் என்று கணித்திருந்தது. அதன்படி 155 ரன்கள் எடுத்தது. மேலும் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. அதன்படியே சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதுபோன்று அடுத்தடுத்து விளையாட்டு செய்திகள் மற்றும் கணிப்புகளுக்கு ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்திருங்கள்.