CSK vs PBKS போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்! நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொள்ள சிஎஸ்கே பிளான்!

First Published | Apr 26, 2023, 2:20 PM IST

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 41ஆவது போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் பாதி போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்துவிட்டன.

சிஎஸ்கே டிக்கெட்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் அணிகள் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடி வருகின்றன. இதுவரையில் 35 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான அடிப்படை புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன.

Tap to resize

சென்னை சேப்பாக்கம்

தற்போது வரையில் ஏழேழு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ்

மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4ஆவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் இடம் பெற்றுள்ளன. இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெற உள்ள நிலையில் அதனை அவராகவே பல போட்டிகளில் மறைமுகமாக கூறி வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இதன் காரணமாக தனது கடைசி சீசன் என்பதால், எப்படியாவது இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை பெற வேண்டும் என்று தீவிரமாக அணியை பலப்படுத்தி விளையாடி வருகிறார்.

எம்.எஸ்.தோனி

சென்னை மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடும் மற்ற மைதானங்களிலும் தோனிக்காகவே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் 30 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஹோம் மைதானமான சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் 41ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சிஎஸ்கே

இதற்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த பல போட்டிகளில் சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

அதுமட்டுமின்றி டிக்கெட்டுகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 30ஆம் தேதிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!