7 போட்டி 183 ரன்னு தான்: மொத்தமாக வீணாகும் ரூ.15.25 கோடி; இஷான் கிஷானை நம்பி ஏமாந்த மும்பை இந்தியன்ஸ்?

First Published | Apr 26, 2023, 1:11 PM IST

இஷான் கிஷானை நம்பி ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை இந்தியன்ஸ் ஏமாற்றத்தை சந்தித்து வருகிறது. 7 போட்டிகளில் விளையாடி 183 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார்.

இஷான் கிஷான்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. தற்போது வரையில் முதல் பாதி போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இதுவரையில் ஒவ்வொரு அணியும் ஏழேழு போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. 

இஷான் கிஷான்

இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 3ஆவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4ஆவது இடத்திலும் உள்ளது.

Tap to resize

இஷான் கிஷான்

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் தற்போது 7ஆவது இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா ரூ.16 கோடி, இஷான் கிஷான் ரூ.15.25 கோடி, கேமரூன் க்ரீன் ரூ.17.50 கோடி, ஜோஃப்ரா ஆர்ச்சர் ரூ.8 கோடிக்கு இவர்கள் அனைவரும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதில், இவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை.

இஷான் கிஷான்

இந்த சீசனில் ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷான் இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் சேர்த்து மொத்தமாக 183 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், ஒரேயொரு முறை மட்டுமே அவர் அரைசதம் எடுத்துள்ளார். இஷான் கிஷான் விளையாடிய 7 போட்டிகளில் முறையே 10, 32, 31, 58, 38, 1, 13 ரன்கள். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார்.
 

இஷான் கிஷான்

இதுவரையில் நடந்த 7 போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி அதிரடி காட்டியிருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கலாம். அப்படியும் இல்லயென்றால் வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறலாம். 

இஷான் கிஷான்

ஆனால், அப்படி ஏதும் நடக்காத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற ரஹானே முதல் 2 போட்டிகளில் இடம் பெறாத நிலையில், மற்ற 5 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 209 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 அரைசதம் அடங்கும். 

இஷான் கிஷான்

இதுவரையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 61, 31, 37, 71 (நாட் அவுட்), 9 என்று ரன்கள் சேர்த்துள்ளார். இதன் காரணமாக ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Latest Videos

click me!