எம்.எஸ்.தோனிக்கு சம்பள உயர்வா? ரூ.8 கோடி முதல் ரூ.16 கோடி வரை கிடைக்க வாய்ப்பு - பிசிசிஐ விதியில் மாற்றமா?

Published : Aug 19, 2024, 11:26 AM ISTUpdated : Aug 19, 2024, 03:25 PM IST

ஐபிஎல் 2025 - எம்எஸ் தோனி: கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனிக்காக பிசிசிஐ புதிய ஐபிஎல் விதிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ உண்மையில் ஐபிஎல்லில் மாற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளதா? அறிக்கையின் விவரங்கள் இங்கே..   

PREV
16
எம்.எஸ்.தோனிக்கு சம்பள உயர்வா? ரூ.8 கோடி முதல் ரூ.16 கோடி வரை கிடைக்க வாய்ப்பு - பிசிசிஐ விதியில் மாற்றமா?
MS Dhoni

ஐபிஎல் 2025 - எம்எஸ் தோனி: ஐபிஎல் 2025க்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஐபிஎல் 18வது சீசன் தொடரில் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி வீரராக இருப்பாரா? என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. அதே நேரத்தில் எம்எஸ் தோனியை களமிறக்க பிசிசிஐ, ஐபிஎல் விதிமுறைகளை மீண்டும் திருத்த உள்ளதாக தகவல்கள் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன. 

26
Chennai Super Kings

வரவிருக்கும் 18வது சீசன் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. மெகா ஏலம் என்பது அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வைத்திருக்க அனுமதிக்கும். அதோடு எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், முந்தைய விதிமுறைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் பிசிசிஐயிடம் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

36
CSK, IPL 2025

அதற்கு முன் 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை அன்-கேப்டு (Uncapped) வீரர்கள் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற விதி இருந்தது. இது ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனில் இருந்து 2021 ஐபிஎல் தொடர் வரை அமலில் இருந்தது. இருப்பினும், அதுவரை எந்த அணிகளும் இந்த விதிகளைப் பயன்படுத்தவில்லை. இதனால், பிசிசிஐ இந்த விதிகளை நீக்கியது. இருப்பினும், ஜூலை 31 அன்று பிசிசிஐ மற்றும் அணிகளுக்கு இடையே நடந்த கூட்டத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் பழைய விதிகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரியதாக பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

46
IPL 2025 Mega Auction

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் கோரிக்கைக்கும் அணிகள் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தகவல். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீரர்களை அன்-கேப்டு வீரர்கள் பட்டியலில் சேர்க்க பிசிசிஐ ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

56
MS Dhoni and Ruturaj Gaikwad

தோனி ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தோனியை ரூ.12 கோடிக்கு வாங்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த 17ஆவது சீசன் தொடங்குவதற்கு முன்பே தோனி கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகியதால், ஐபிஎல் 2024 சீசனில் சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

66
MS Dhoni, Chennai Super Kings

தோனி அன்-கேப்ட் வீரராக இருந்தால் சென்னைக்கு என்ன லாபம்? ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை அணிகள் தக்கவைத்துக் கொண்டால், அவர்கள் அதிகபட்சமாக 16 கோடி, குறைந்தபட்சம் 8 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது ரூ.4 கோடி குறைவாக அன்-கேப்ட் (சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்) வைத்திருக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தோனியின் பிராண்ட் மதிப்பு மற்றும் ஏலத்திற்கான பணப்பையை சிறப்பாக வைத்திருக்க சென்னை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் சென்னை நிர்வாகத்தின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories