
ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் (IPL 2025) திருவிழா இன்னும் ஓரிரு நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தங்களது ஹோம் சிட்டியில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஐபிஎல் தொடரை விட இந்த ஐபிஎல் 2025 தொடரானது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணமாக அணிகளில் கேப்டன்கள் மாற்றம் மட்டுமின்றி பிளேயர்ஸூம் வேறு வேறு அணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் தான் ரிஷப் பண்ட், அஜிங்க்யா ரஹானே, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, நடராஜன், இஷான் கிஷான்.
இந்த சீசனில் இவர்கள் இடம் பெற்றுள்ள அணிகள் மீது தான் இப்போது அதிக கவனம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் ஐபிஎல் 2025 (IPL 2025) தொடருக்கு முன்னதாக ஜியோஹாட்ஸ்டார் நடத்திய பவர் பிளே (Power Play) நிகழ்ச்சியில் ஐபிஎல் முன்னாள் வீரர்களான ஏபி டிவில்லியர்ஸ், அனில் கும்ப்ளே, ஆகாஷ் சோப்ரா, அஜய் ஜடேஜா, ஷேன் வாட்சன் ஆகியோர் இடம் பெற்று சிஎஸ்கேயின் பாரம்பரியம் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் எப்படி சிஎஸ்கே அணியை முன்னெடுத்து செல்வார் என்பதைப் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.
சிஎஸ்கே உடனான தோனியின் பிணைப்பு எப்படி?
ஆகாஷ் சோப்ரா: தோனி (MS Dhoni) மற்றும் சிஎஸ்கே (CSK) ரசிகர்களின் பிணைப்பு உண்மையிலேயே அற்புதமானது. ஒரு வெளிநகர வீரரை சொந்த நகரின் மகனாக ஏற்றுக்கொள்வது அரிதான விஷயம்.
அஜய் ஜடேஜா: 2008-ல் IPL தொடங்கிய போது, ஒவ்வொரு அணிக்கும் ஒரு ஐகான் இருந்தார்—யுவராஜ் பஞ்சாபுக்கு, சேவாக் டெல்லிக்கு. ஆனால் தோனி ஒருநாள் சிஎஸ்கேயின் அபிமானக் குழந்தை நட்சத்திரமாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அனில் கும்ப்ளே: தமிழ்நாட்டில் ஹீரோ வழிபாடு வழக்கம். அதனால், தோனி இங்கு கடவுளாக போற்றப்படுவதில் ஆச்சரியமில்லை.
CSK-ன் கேப்டன் மாற்றம் குறித்து நட்சத்திரங்களின் கருத்து:
ஷேன் வாட்சன்: 42 வயதாகியும் தோனி இன்னும் அசாத்தியத் தருணங்களை வழங்குகிறார். அவர் இப்போது கேப்டனாக இல்லாமல் அணியில் ஒரு விக்கெட் கீப்பராக மட்டுமே இருக்கிறார். ஆனால் அணிக்கும் ரசிகர்களுக்கும் அவரின் தாக்கம் மட்டும் இன்னும் குறையவில்லை.
ஆகாஷ் சோப்ரா: ஒரு அணியின் பருவம் எதிர்பார்த்தபடி செல்லவில்லை என்றால், ‘தோனி கீழே பேட் செய்ததால் எனப் பலர் கேள்விக்கிடக்கலாம். ஆனால் இது CSK-வின் நீண்ட கால உத்தி—அடுத்த தலைமுறைக்கு வழிவகுக்க ஒரு திட்டம்.
ருதுராஜ் கெய்க்வாட்: கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஒரு வாரம் முன், தோனி என்னிடம் வந்து, ‘இந்த வருடம் நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை. நீ தான் சிஎஸ்கேயின் கேப்டன் என்றார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘முதல் போட்டியிலிருந்து? நீங்கள் உறுதியாக சொல்லுகிறீர்களா?’ என்று கேட்டேன். தயாராகத் தோன்றவில்லை. ஆனால் அவர் என்னை உற்சாகப்படுத்தினார். இது உன் அணி. நீ உன் முடிவுகளை எடு. நான் தலையிட மாட்டேன். ஆனால், ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஆலோசனை தருவேன். அதையும் பின்பற்ற வேண்டியது கட்டாயமில்லை.’ அந்த நம்பிக்கை எனக்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
ஷேன் வாட்சன்: தோனி தனது இயல்பான கேப்டன்ஷி செயல்பாட்டை தவிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன் பதவியை வழங்கியது ஆச்சரியமானது. ஆனால், அவர் ஒரு மிருதுவான மாற்றத்தை உறுதி செய்வதற்காக இதை செய்திருக்கிறார்.
ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியில் சிஎஸ்கே எப்படி?
அனில் கும்ப்ளே: ரோகித் சர்மா முதன்முறையாக கேப்டன் ஆனபோது, அணியில் பல கிரிக்கெட் லெஜெண்டுகள் இருந்தனர். அதுபோலத்தான், அணியில் ஒருவராக நீங்கள் அந்த பொறுப்பை எப்படி ஏற்கிறீர்கள் என்பதில்தான் நிறைய இருக்கிறது. ருதுராஜ் அதை மிக நன்றாக கையாண்டார்.
ஆகாஷ் சோப்ரா: ஒரு பழைய கேப்டன் இன்னும் அணியில் இருந்தால், அது ஒத்துழைப்பா, இல்லையெனில் புதிய கேப்டன் உண்மையிலேயே ஆட்சி செலுத்துகிறாரா என்ற குழப்பமா? ஆனால் தோனி ஒரு தனிப்பட்டவர். அவர் மாற்றத்தை மிக அமைதியாக, எந்த விதத்திலும் புதிய தலைவரை ஒடுக்காமல் நிகழ்த்துகிறார்.
ராபின் உத்தப்பா: 2023 சீசன் CSK-க்கு மிகவும் சிறப்பாக இருந்தது, அதனால் தலைமை மாற்றத்துக்கு சரியான தருணம் வந்தது. ருதுராஜ் அமைதியான, சிறப்பான அணுகுமுறையுடன் இருப்பது, தோனியை தான் நினைவுபடுத்துகிறது. அவர் ஒரு தலைவராக வளர்ந்து வருகிறார்.
ஷேன் வாட்சன்: “ருதுராஜ் அபாரமாக செயல்பட்டுள்ளார். தோனி அணியில் இருந்தாலும், அது அவரின் பேட்டிங் ஆட்டத்தை பாதிக்கவில்லை. இது CSK-ன் தலைமை மாற்றத்திற்கான திட்டம் எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
தோனியின் எதிர்காலம் எப்படி?
ஆகாஷ் சோப்ரா: தோனியின் எதிர்காலம் குறித்து CSK ஏற்கனவே திட்டமிடத் தொடங்கியுள்ளது. அவர் அணியில் இடம் பெறும் காலம் சீக்கிரம் முடிந்துவிடும்.
அனில் கும்ப்ளே: ருதுராஜ் அணியின் தலைவராக இருப்பதால், இந்த சீசனில் தோனி கூடாது என்ற நிலை ஏற்படலாம். ஆனால், retention விதிகளின்படி அவர் அணியில் இருக்கலாம். Impact Player விதியின் கீழ், அவர் மைதானத்தில் இல்லை என்றாலும், CSK-க்கு முக்கிய பங்களிப்பை வழங்கலாம்.
ஏபி டி வில்லியர்ஸ்: நீண்ட காலமாக கிரிக்கெட்டில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் தான் தோனி. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் நோக்கி இழுத்தவர். இன்னும் சில ஆண்டுகள் அவர் தொடர்வதற்காக நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி (விக்கெட் கிப்பர்), டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே சித்தார்த், ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர், சாம் கரண், அன்ஷுல் கம்போஜ், தீபக் கூடா, ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லீஸ், ஷ்ரேயாஸ் கோபால், மதீஷா பதிரனா