சஞ்சு சாம்சனுக்காக தோனியின் தளபதியை விட்டுக் கொடுக்கும் சிஎஸ்கே..! ரசிகர்கள் ஷாக்!

Published : Nov 09, 2025, 04:23 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்குவதற்காக ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே விட்டுக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் டெவால்ட் பிரெவிஸையும் ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது.

PREV
14
ஐபிஎல் 2026 தொடர்

ஐபிஎல் 2026 தொடர் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மினி ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்கள் டிரேட் முறை மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு வெளியேற அல்லது மினி ஏலத்தில் பங்கேற்கும் வகையில் அணியில் இருந்து தன்னை விடுவிக்க‌ வேண்டும் என ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாயின.

24
சஞ்சு சாம்சன் டிரேட்

இதனால் சிஎஸ்கே அணி டிரேட் முறையில் சஞ்சு சாம்சனை இழுக்க ராஜஸ்தான் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் சஞ்சு சாம்சனை டிரேடு செய்ய வேண்டுமென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு முக்கிய வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டெவால்ட் பிரெவிஸ், ஜடேஜா வேண்டும்

அதாவது சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸை ஆகிய இருவரையும் கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் இருவரையும் கொடுத்தால் மட்டுமே சஞ்சு சாம்சனை உங்களுக்கு கொடுப்போம் என ராஜஸ்தான் நிர்வாகம் சென்னை அணியிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா இருவரும் ரூ.18 கோடி வீரர்கள் தான்.

34
ஜடேஜாவை விட்டுக் கொடுக்கும் சிஎஸ்கே

இதனால் ஜடேஜாவை டிரேட் செய்ய சிஎஸ்கே தயாராக இருந்தாலும், கூடுதல் வீரர்களைத் தர விரும்பவில்லை. டெவால்ட் பிரெவிஸ் 2025 சீசனின் இடையில் சிஎஸ்கே அணியில் இணைந்தார். சில போட்டிகளில் மட்டுமே ஆடினாலும், தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.'பேபி ஏபி' எனப் பெயர் பெற்ற டெவால்ட் பிரெவிஸ்ஸை எதிர்கால முதலீடாக சிஎஸ்கே பார்க்கிறது.

44
மற்ற அணிகள் ஆர்வம் காட்டவில்லை

கடந்த சீசனின் நடுப்பகுதியில், காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்றாக பிரெவிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் சிஎஸ்கே மட்டுமின்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ, டெல்லி, கொல்கத்தா அணிகளுடனும் டிரேட் தொடர்பாக பேசி வருகிறது. ஆனால், மற்ற அணிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories