#AUSvsIND குவாரண்டின் கெடுபிடி சர்ச்சை.. பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆட இந்திய அணி சம்மதம்

First Published Jan 11, 2021, 1:58 PM IST

குவாரண்டின் கெடுபிடி சர்ச்சை பூதாகரமாக இருந்த நிலையில், பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் ஆட இந்திய அணி சம்மதம் தெரிவித்துள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துவிட்டன. முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், சிட்னியில் இன்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
undefined
வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது கடைசி டெஸ்ட். பிரிஸ்பேன் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் குவாரண்டின் கெடுபிடி கடுமையாக உள்ளது. ஆஸி.,க்கு வரும் முன், துபாயிலும், பின் ஆஸி.,க்கு வந்த பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக சுமார் ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய அணி, குயின்ஸ்லாந்து குவாரண்டின் கெடுபிடிகளால் அதிருப்தியடைந்தது.
undefined
குவாரண்டின் கெடுபிடிகள் மீதான அதிருப்தியை பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியது. குவாரண்டின் கெடுபிடிகளை தளர்த்தவில்லை என்றால் இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் ஆடாது எனும் அளவிற்கு தகவல்கள் வெளிவந்தன.
undefined
இந்நிலையில், இந்திய அணி பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் ஆட ஒப்புக்கொண்டதாகவும், 12ம் தேதி சிட்னியிலிருந்து பிரிஸ்பேனுக்கு புறப்படவுள்ளதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால சி.இ.ஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து ஆஸி.,யின் சென் ரேடியோவில் பேசிய நிக் ஹாக்லி, நேற்றிரவு பிசிசிஐ செயலாளரிடம் இருந்து எனக்கு கால் வந்தது. அப்போது, கடைசி டெஸ்ட்டில் ஆடுவதாகவும் இந்திய அணி செவ்வாய்க்கிழமை பிரிஸ்பேனுக்கு வரும் என்றும் தெரிவித்ததாக ஹாக்லி கூறினார்.
undefined
பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் வெல்லும் அணி தான் தொடரை வெல்லும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
undefined
click me!