#AUSvsIND காயத்தால் பும்ராவும் விலகல்..! இந்திய அணிக்கு மரண அடி

First Published Jan 12, 2021, 6:50 PM IST

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் பும்ரா ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு வீரர்களின் காயம் தொடர் சோகமாக அமைந்துள்ளது. ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், ஜடேஜா ஆகிய வீரர்களை தொடர்ந்து பும்ராவும் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
undefined
3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி பிரிஸ்பேனில் நடக்கும் டெஸ்ட் தான். ஆனால் அந்த முக்கியமான போட்டியில், பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.
undefined
முதல் டெஸ்ட்டில் ஷமி, 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ், 3வது டெஸ்ட்டில் ஜடேஜா ஆகியோர் காயமடைந்து ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் வீதம் முக்கியமான வீரர்கள் விலகிக்கொண்டே வந்த நிலையில், பும்ராவும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவும்.
undefined
பும்ராவுக்கு அடிவயிறு வலி காரணமாக, இந்தியாவில் அடுத்ததாக நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, காயம் பெரிதாகிவிடக்கூடாது என்பதால், கடைசி டெஸ்ட்டில் பும்ரா ஆடாமல் விலகியுள்ளார்.
undefined
click me!