#IPL2021 நான் அவரோட மிகப்பெரிய ரசிகன்.. ஐபிஎல்லில் அவர் ஆடுறத பார்க்க ஆவலா இருக்கேன் - பிரெட் லீ

First Published Apr 9, 2021, 6:05 PM IST

ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்கும் நிலையில், டெஸ்ட் வீரராக முத்திரை குத்தப்பட்ட புஜாரா, இந்த சீசனில் ஆடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக ஆஸி., முன்னாள் ஜாம்பவான் பவுலர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
 

டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாராவை, ஐபிஎல் அணிகள் தொடர்ந்து புறக்கணித்துவந்தன. இரண்டே மாதத்தில் கோடிகளில் சம்பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் ஐபிஎல்லில், புஜாரா, ஹனுமா விஹாரி போன்ற டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
undefined
ஐபிஎல்லில் நன்றாக ஆடும் வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களால் அதிரடியாக ஆடமுடியாது என்று ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்டு புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய வீரர்களை ஐபிஎல் அணிகள் ஒதுக்கிவருகின்றன.
undefined
இந்நிலையில், புஜாராவை ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. சிஎஸ்கே அணி புஜாராவை ஏலத்தில் எடுத்ததுமே, ஏலத்தில் கலந்துகொண்ட மற்ற அணிகள் கைதட்டி சிஎஸ்கே அணியின் முடிவை வரவேற்றனர்.
undefined
புஜாராவை சிஎஸ்கே அணி எடுத்தாலும், ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகமே. புஜாரா சிஎஸ்கே அணிக்காக களத்தில் இறங்கி ஆடுவாரா என்று ரசிகர்கள் மட்டுமல்ல, முன்னாள் ஜாம்பவான்கள் பலருமே எதிர்பார்ப்பில் உள்ளனர்.
undefined
அந்தவகையில், புஜாரா ஆடுவதை பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பிரெட் லீ, 2 விஷயங்களை பார்க்க வேண்டும். முதலில், புஜாரா டெரிஃபிக்கான கிரிக்கெட்டர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது திறமை, பேட்டிங் டெக்னிக், மன உறுதி ஆகியவற்றில் எந்த சந்தேகமும் இல்லை. புஜாரா சிறந்த பேட்ஸ்மேன். மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். அதாவது, இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல; டி20 கிரிக்கெட். ஒரு இன்னிங்ஸ் 90 நிமிடத்தில் முடிந்துவிடும்.
undefined
எனவே செட்டில் ஆக நேரமெல்லாம் எடுத்துக்கொள்ளாமல், களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி ஸ்கோர் செய்ய வேண்டும். அழுத்தத்தில் புஜாராவால் அதை செய்ய முடியுமா? அவரால் முடியும். அண்மையில் ஆஸி., தொடரில் அவர் ஆடியதை பார்த்தோம். எனவே அவரை எடுத்தது நல்ல முடிவு. புஜாராவின் மிகப்பெரிய ரசிகன் நான். டி20 கிரிக்கெட்டில் அவர் அளிக்க வேண்டிய பங்களிப்பு நிறைய இருக்கிறது. ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
undefined
புஜாரா வலைப்பயிற்சியில் சிக்ஸர்களை விளாசி, தன்னாலும் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியும் என்பதை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!