இனி இவர் ஹீரோ இல்ல ஜீரோ! கேவலமாக இல்லையா பென் ஸ்டோக்ஸ்? வறுத்தெடுக்கும் இந்தியர்கள்! என்ன நடந்தது?

Published : Jul 28, 2025, 02:47 PM IST

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் களத்தில் மோசமாக நடந்து கொண்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

PREV
14
Ben Stokes Faces Criticism For Insulting Jadeja

மான்செஸ்ட‌ரில் நடந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 300க்கும் மேற்பட்ட ரன்கள் பின்தங்கிய நிலையில், பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட் இழந்தது. இதனால் தோல்வியை சந்திக்கும் என அனைவரும் நினைத்த நிலையில், கேப்டன் சுப்மன் கில் (103 ரன்), ரவீந்திர ஜடேஜா (107 நாட் அவுட்), வாஷிங்டன் சுந்தர் (101 நாட் அவுட்) மற்றும் கே.எல்.ராகுல் (90) ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க டிராவை செய்தது

24
4வது டெஸ்ட்டை டிரா செய்த இந்திய அணி

இந்த போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அந்த அணி வீரர்கள் நடந்து கொண்ட விதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது 4வது டெஸ்ட்டின் 5ம் நாள் கடைசி செஷனில் இந்திய அணி டிராவுக்காக விளையாடிக் கொண்டிருந்தது. ஆட்டம் முடிய ஒரு மணி நேரம் இருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

டிரா செய்ய கெஞ்சிய பென் ஸ்டோக்ஸ்

அப்போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இருவரிடமும் வந்து கைகுலுக்கி போட்டியை டிரா செய்ய முன்வந்தார். அப்போது இருவரும் சதம் அடிப்பதற்காக டிரா செய்ய முடியாது என்று தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பென் ஸ்டோக்ஸ் ''ஹாரி ப்ரூக் மற்றும் பென் டக்கெட் போன்றவர்களுக்கு எதிராக சதம் அடிக்க விரும்புகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு ஜடேஜா, ''என்னால் ஏதும் செய்ய முடியாது'' என்று தெரிவித்தார். இதன்பிறகு மற்ற இங்கிலாந்து அணி வீரர்களும் இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்தபடி இருந்தனர்.

34
ஜடேஜாவுடன் கைகுலுக்க மறுத்த ஸ்டோக்ஸ்

பின்பு போட்டி முடிந்தவுடன் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவுடன் கைகுலுக்க மறுத்தார். இதனால் கோபமடைந்த ஜடேஜா, ஸ்டோக்ஸை அழைத்து பேசினார். அதன்பின்னர் வேண்டா வெறுப்பாக ஜடேஜாவின் முகத்தை பார்க்காமல் ஸ்டோக்ஸ் அவருடன் கைகுலுக்கினார். அவரின் இந்த நடத்தைக்கு ரசிர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''ஓவர் முடியும் வரை இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாட முடியும். இருவரும் சதத்தை நெருங்குகிறார்கள். வாஷிங்டன் சுந்தருக்கு இது முதல் சதம். இந்த நிலையில், ஸ்டோக்ஸ் ஏன் போட்டியை முடிக்க கட்டாயப்படுத்த வேண்டும்'' என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மிகவும் மோசம்

இது குறித்து பேசிய முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர், ''பென் ஸ்டோக்ஸ் களத்தில் மிகவும் மோசமான பையனாக நடந்து கொண்டார். இந்திய வீரர்கள் சதம் அடிக்க முயற்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஸ்டோக்ஸ் அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்'' என்றார். இதேபோல் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ''விளையாட்டு உணர்வு குறித்து உலகுக்கு பாடம் எடுக்கும் இங்கிலாந்து இனி அதுகுறித்து பேசவே முடியாது. இங்கிலாந்து போட்டியை முடிக்க விரும்பினால் அதற்கு இந்தியாவும் தலையசைக்க வேண்டுமென அர்த்தமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

44
முடிவில் விளக்கம் அளித்த ஸ்டோக்ஸ்

ஆட்டம் முடிந்தபிறகு நடந்த சம்பவம் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், ''முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படாமல் பாதுகாப்பதற்காகவே போட்டியை டிரா செய்ய முன்வந்தோம். எங்களது வீரர்கள் அதிக பணிச்சுமையில் இருந்தனர்'' என்று தெரிவித்தார். என்ன விளக்கம் கொடுத்தாலும் பென் ஸ்டோக்ஸ் செய்த செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என ரசிகர்கள் அவரை தொடர்ந்து வசைபாடி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories