ஐயோ! சின்னசாமி மைதானமே வேண்டாம்! 11 பேர் பலிக்கு இதுதான் காரணமா?

Published : Jul 26, 2025, 08:12 PM IST

சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்வுகளுக்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என கர்நாடக அரசு நியமித்த குழு அறிவித்துள்ளது. மைதானத்தின் வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் போதுமான வசதிகள் இல்லாததால், பெரிய கூட்டங்களை நடத்த முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

PREV
15
பெங்களூரு சின்னசாமி மைதானம்

கடந்த ஜூலை 4-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு நியமித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா ஆணையம், சின்னசாமி மைதானம் "பெரிய அளவிலான நிகழ்வுகளுக்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது" என்று அறிவித்துள்ளது.

25
மைதானத்தின் வடிவமைப்பு குறைபாடுகள்

கர்நாடக அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் அறிக்கையில், மைதானத்தின் வடிவமைப்பு மற்றும் அமைப்பு கடுமையாகக் criticize செய்யப்பட்டுள்ளது. 1974-ல் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் உள்ள பல முறையான வரம்புகளைக் குழுவின் கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. பெரிய கூட்டங்களை நடத்த இன்னும் பொருத்தமான இடங்களுக்கு முக்கிய நிகழ்வுகளை மாற்றுமாறு ஆணையம் வலுவாகப் பரிந்துரைத்துள்ளது.

"எதிர்காலத்தில் எந்த ஒரு இடமும் சர்வதேச தரங்களுக்கு இணங்க வேண்டும்" என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெற உள்ள ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கும் தனது மகாராஜா டிராஃபி டி20 லீக் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய அரங்கில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

35
தேவையான வசதிகள் இல்லை

சின்னசாமி மைதானத்தில் பெருமளவிலான நுழைவு மற்றும் வெளியேற்றத்தை நிர்வகிக்க போதுமான வாயில்கள் இல்லை. பொது போக்குவரத்து மற்றும் அருகிலுள்ள சுற்றுலா மையங்களுக்கான ஒருங்கிணைந்த வழி இல்லை. உலகளாவிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களைக் கையாள போதுமான வாகன நிறுத்த வசதிகள் இல்லை. இதுபோன்ற பல அத்தியாவசியத் தேவைகள் இல்லை என்று அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

45
முதல்வரின் நடவடிக்கை

இந்தச் சம்பவத்தில் கர்நாடகா கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட், முன்னாள் செயலாளர் ஏ. சங்கர் மற்றும் முன்னாள் பொருளாளர் இ.எஸ். ஜெயராம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இவர்களில் சங்கர் மற்றும் ஜெயராம் இருவரும் கூட்டநெரிசல் ஏற்பட்டதற்கு தார்மீகப் பொறுப்பேற்று ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டனர். ஆர்சிபி துணைத் தலைவர் ராஜேஷ் மேனன் மற்றும் டி.என்.ஏ. என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் நிர்வாகிகள் டி. வெங்கட் வர்தன் மற்றும் சுனில் மாத்தூர் ஆகியோரின் பெயர்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் B. தயானந்தா, விகாஷ் குமார், சேகர் H.T., C. பாலகிருஷ்ணா மற்றும் ஏ.கே. கிரிஷ் ஆகியோரும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கெனவே முதல்வர் சித்தராமையாவால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

55
அபாயங்கள் நிறைந்த மைதானம்

சின்னசாமி மைதானத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் நிகழ்வுகளை நடத்துவது பொது பாதுகாப்பு, நகர்ப்புற இயக்கம் ஆகியவற்றிற்கு அபாயங்களை ஏற்படுத்தும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பரிந்துரைகள் குறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு அணி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை 18 வருட காத்திருப்புக்குப் பிறகு வென்ற ஒரே நாளில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories