இந்தியாவில் விளையாட முடியாது.. வங்கதேசம் திட்டவட்டம்.. 'ஆப்பு' வைக்கும் ஐசிசி.. அதிரடி மூவ்!

Published : Jan 22, 2026, 08:04 PM IST

ஐபிஎல்லில் இருந்து வங்கதேச வீரர் நீக்கப்பட்டதால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேண்டுமென்றே கூறி இலங்கையில் போட்டியை மாற்ற விரும்புகிறது.

PREV
14
முரண்டு பிடிக்கும் வங்கதேசம்

அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வர முடியாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி இந்தியாவில் விளையாட முடியாது. தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்றும்படி வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

வங்கதேச பூச்சாண்டிக்கு மசியாத ஐசிசி

ஆனால் வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி அதிரடியாக நிராகரித்தது. இந்தியாவில் வங்கதேச வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுமா? இல்லையா? என்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் 24 மணி நேரத்தில் முடிவு சொல்ல வேண்டும் என நேற்று ஐசிசி கெடு விதித்து இருந்தது.

24
வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்

இந்த நிலையில் தான் டி20 உலகக்கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளோம். ஆனால் இந்தியாவில் விளையாட முடியாது. தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்றினால் விளையாட ரெடி என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அதிரடியாக கூறியுள்ளது. ''இலங்கையில் டி20 உலகக் கோப்பை போட்டிகளை விளையாடும் திட்டத்துடன் ஐசிசியை அணுகியபோது, ​​அவர்கள் எங்களுக்கு 24 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்தனர். 

ஆனால் ஒரு உலகளாவிய அமைப்பு அதை ஒருபோதும் செய்ய முடியாது. ஐசிசி உலகக் கோப்பையைப் பார்க்கும் 200 மில்லியன் மக்களை இழக்கப் போகிறது. ஐசிசி கூட்டத்தில் நான் கேள்விப்பட்ட சில விஷயங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன'' என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

34
வங்கதேசம் இந்தியா வர மறுத்தது ஏன்?

வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்கள் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டு வரும் நிலையில், இதை எதிர்த்து பிசிசிஐ உத்தரவுப்படி வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை தங்கள் அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருந்து நீக்கியது. இதனால் பொங்கியெழுந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேண்டுமென்றே கூறி இலங்கையில் போட்டியை மாற்ற விரும்புகிறது.

44
ஐசிஐ எடுக்கப் போகும் நடவடிக்கை

இது தொடர்பாக ஐசிசி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் வங்கதேசம் கேட்கவில்லை. வங்கதேசம் இந்தியாவுக்கு விளையாட வரவில்லை என்றால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்படும் என ஐசிசி ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. 

இப்போது வங்கதேசம் இந்தியா வர முடியாது என பிடிவாதமாக உள்ளதால் டி20 உலகக்கோப்பையில் வங்கதேச அணியை நீக்கி விட்டு ஸ்காட்லாந்து அணியை ஐசிசி சேர்க்கும்.

வங்கதேசம் விளையாட வேண்டிய போட்டிகள் அனைத்தும் அவர்கள் தோற்றதாக கருதப்படும். மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கொடுக்கும் வருவாயையும் ஐசிசி நிறுத்தி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories