வொயிட் வாஷை நோக்கி துரத்தும் வங்கதேசம்; தப்புமா பாகிஸ்தான்? இரண்டாவது டெஸ்டிலும் பரிதாபம்

First Published | Sep 2, 2024, 7:54 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் வங்கதேசம் உள்ள நிலையில், வொயிட் வாஷை பாகிஸ்தான் தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Pak Vs Ban

பாகிஸ்தான், வங்காளதேசம் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வங்காளதேசம் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்டிலாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பாகிஸ்தான் களம் இறங்கியது.

Ban Vs Pak

டாஸ் வென்ற வங்கதேசம் பாகிஸ்தானை பேட்டிங் செய் பணித்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சபீக் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சைம் அயூப், ஷான் மசூத், சல்மான் அலி ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் அந்த அணி 274 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

Latest Videos


Litton Das

அடுத்ததாக பேட்டிங் செய்த வங்கதேசம் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் 7வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய லிட்டன் தாஸ் சதம் விளாசி அசத்தினார். 138 ரன் சேர்த்த நிலையில் அவர் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஹசன் மிராஸ் 78 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 262 என்ற நாகரிகமான ஸ்கோரை எட்டியது.

Pak Vs Ban

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அப்போதும் பொறுப்பற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் கூட எட்டாத நிலையில் 172 ரன்களுக்கே ஆட்டம் இழந்தது. இதனால் 185 என்ற எளிதான் இலக்கை நோக்கி வங்கதேச வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Babar Azam

வங்கதேச வீரர்கள் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்த நிலையில் வெளிச்சமின்மை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வெளிச்சம் குறைவாக இருந்ததால் 4வது நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வங்கதேசம் வசம் 10 விக்கெட்டுகள் உள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானை வொயிட் வாஷ் செய்யும் முனைப்பில் வங்கதேச வீரர்கள் உள்ளனர்.

click me!