காம்பீர் வெளியிட்ட ஆல் டைம் பிளேயிங் 11: தோனி தான் கேப்டன், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, பும்ரா இல்லை!

First Published | Sep 2, 2024, 7:06 PM IST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தனது ஆல் டைம் பிளேயிங் 11ஐ வெளியிட்டுள்ளார். இதில் தோனி கேப்டனாகவும், கம்பீர் துணை கேப்டனாகவும் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பெறவில்லை.

Gautam Gambhir All Time Playing XI

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்து அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் கவுதம் காம்பீர் தனது ஆல் டைம் பிளேயிங் 11ஐ வெளியிட்டுள்ளார். அதில் எம்.எஸ்.தோனி தான் கேப்டனாக இடம் பெற்றுள்ளார். மேலும், ரோகித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை.

Gautam Gambhir All Time Playing XI

ஓபனிங் ஜோடியாக கவுதம் காம்பீர் தன்னுடன் அதிரடி மன்னனான வீரேந்திர சேவாக்கை சேர்த்துக் கொண்டார். இந்திய அணியில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இவர்களது பங்கு அதிக முக்கியத்தும் பெற்றுள்ளது. ஏராளமான போட்டிகளில் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

Tap to resize

Gautam Gambhir All Time Playing XI

இவர்களைத் தொடர்ந்து 3ஆவது வரிசையில் இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இடம் பெற்றுள்ளார். இப்போது விராட் கோலி என்றால், அப்போது மட்டை மன்னனாக திகழ்ந்த ராகுல் டிராவிட் தான் அணிக்கு முதுகெலும்பாக இருந்துள்ளார். பல போட்டிகளில் அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

Gautam Gambhir All Time Playing XI

நான்காவது மற்றும் 5ஆவது இடத்தில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அண்யின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இவர்கள் இருவரும் திகழ்கின்றனர். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினும், நம்பிக்கை நட்சத்திரமான கோலியும் சரி, கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.

Gautam Gambhir All Time Playing XI

ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டராக திகழும் யுவராஜ் சிங் 6ஆவது இடத்தில் இடம் பெற்றிருக்கிறார். இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் யுவியும் ஒருவர். 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிகளில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gautam Gambhir All Time Playing XI

கம்பீரின் ஆல் டைம் பிளேயிங் 11ல் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்ஸ்மேனாக எம்.எஸ்.தோனியும் இடம் பெற்றுள்ளார். இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் மட்டுமின்றி வெற்றிகரமான கேப்டன். அனைத்து ஐசிசி ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர்களிலும் அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார்.

Irfan Pathan

2 சுழற்பந்து வீச்சாளர்களாக அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் முன்னணி பவுலர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2ஆவது முன்னணி விக்கெட் வீழ்த்திய அஸ்வின், அனைத்து வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். 2011 உலகக் கோப்பையை வென்ற அணியிலும் ஒரு அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Zaheer Khan

இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கான் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் கம்பீரால் தனது சிறந்த பிளேயிங் 11க்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களும் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் வடிவங்களிலும் அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர்.

Gautam Gambhir All Time Playing XI

கவுதம் காம்பீர் ஆல் டைம் பிளேயிங் 11:

வீரேந்திர சேவாக், கவுதம் காம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர், கேப்டன்), அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், இர்பான் பதான், ஜாகீர் கான்.

Latest Videos

click me!