கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் கிரிக்கெட் வீரர் அக்ஷர் ராஜேஷ்பாய் படேல். உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடியுள்ளார். ரஞ்சி டிராபி, துலிப் டிராபி மற்றும் தியோதர் டிராபி போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.
210
ஒரு நாள் கிரிக்கெட்
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 தொடரில் அறிமுகமானார்.
310
டெஸ்ட் போட்டி
இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
410
ஐபிஎல்
இதுதவிர, ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
510
அக்ஷர் படேல் - மேகா காதல்:
இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
610
அக்ஷர் படேல் - மேகா திருமண நிச்சயதார்த்தம்
இதையடுத்து கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29ஆவது பிறந்தநாளன்று இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
710
அக்ஷர் படேல் பிறந்தநாள் திருமண நிச்சயதார்த்தம்
அக்ஷர் படேலின் 29ஆவது பிறந்த நாளான கடந்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி மேகாவை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால், அப்போது திருமண தேதி குறிக்கவில்லை. இதையடுத்து, இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எல்லாம் அக்ஷர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.
810
நியூசிலாந்து
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர் போட்டிகளில் அக்ஷர் படேல் இடம் பெறவில்லை. இது குறித்து பிசிசிஐ, அக்ஷர் படேல் குடும்ப கடமைகள் காரணமாக அவர் இடம் பெறவில்லை என்று கூறியிருந்தது.
910
திருமண தேதி எப்போது?
இந்த நிலையில், இந்த மாதம் இறுதிக்குள்ளாகவோ அல்லது வரும் பிப்ரவரி முதல் 2 வாரங்களுக்காகவோ அக்ஷர் படேல் மற்றும் மேகா திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
1010
கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்
வரும் 23 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமணம் நடக்க உள்ள நிலையில், இந்த திருமணத்தைத் தொடர்ந்து அக்ஷர் படேல் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.