இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
210
இந்தியா, இலங்கைக்கு வாய்ப்பு
இதைத் தொடர்ந்து நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
310
இந்தியா, இலங்கைக்கு வாய்ப்பு
இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி நாளை முதல் பயிற்சியில் ஈடுபட இருக்கின்றனர்.
410
இந்தியா, இலங்கைக்கு வாய்ப்பு
4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
510
இந்தியா, இலங்கைக்கு வாய்ப்பு
ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, இனி வரும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 2 போட்டியிலும் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து வெளியேறும்.
610
இந்தியா, இலங்கைக்கு வாய்ப்பு
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி கிறிஸ்சர்ஜ்ஜில் தொடங்குகிறது.
710
இலங்கைக்கு வாய்ப்பு
மாறாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும். ஏற்கனவே இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியிருக்கிறது. இன்னும், 2 போட்டிகளில் வெற்றி பெற தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
810
இந்தியா, இலங்கைக்கு வாய்ப்பு
அதற்கேற்பவே ஆஸ்திரேலியாவிலும் ஒவ்வொரு வீரராக வெளியேறி வருகின்றனர். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. மிட்செல் ஸ்வீப்சன் அவருக்கு முதல் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து தாயகம் திரும்பியுள்ளார். டேவிட் வார்னர் காயம் காரணமாக எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
910
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
ஜோஸ் ஹசல்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். பேட் கம்மின்ஸ் தாயாரது உடல்நிலை சரியில்லாத நிலையில் தாயகம் திரும்பியுள்ளார். இதனால், 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஆஷ்டன் அகர், டெஸ்ட் தொடரில் விளையாடாத நிலையில், தாயகம் திரும்பியுள்ளார்.
1010
இந்தியா, இலங்கைக்கு வாய்ப்பு
மேட் ரென்ஷா காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளார். பேட் கம்மின்ஸ் விலகிய நிலையில், துணை கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.