#AUSvsIND 2வது டெஸ்ட்: ஆஸி.,யை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய பும்ரா, அஷ்வின்..!

First Published Dec 26, 2020, 1:23 PM IST

2வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணியை 195 ரன்களுக்கு இந்திய பவுலர்கள் பொட்டளம் கட்டினர்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. விராட் கோலி ஆடாததால் இந்திய அணி அஜிங்க்யா ரஹானே கேப்டன்சியில் களம் கண்டது. டாஸ் வென்ற ஆஸி., கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணியை 195 ரன்களுக்கே சுருட்டியது இந்திய அணி. ஆஸி., அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேடும் ஜோ பர்ன்ஸும் களமிறங்கினர். இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரிலேயே ஜோ பர்ன்ஸை டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. விரைவிலேயே ஸ்பின்னர் அஷ்வினையும் பந்துவீச அழைத்தார் கேப்டன் ரஹானே. அந்த முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. மேத்யூ வேடை 30 ரன்களுக்கு வீழ்த்திய அஷ்வின், கடந்த போட்டியை போலவே இம்முறையும் ஸ்மித்தை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கினார்.
undefined
இதையடுத்து 38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணியில், மார்னஸ் லபுஷேனும் டிராவிஸ் ஹெட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினர். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். டிராவிஸ் ஹெட்டை 38 ரன்களுக்கு வீழ்த்தி அந்த ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்தார் பும்ரா. இதையடுத்து லபுஷேனை 48 ரன்களுக்கு வீழ்த்தினார் சிராஜ்.
undefined
டிராவிஸ் ஹெட், லபுஷேன் ஆட்டமிழந்த அடுத்த 61 ரன்களில் ஆஸி., அணி எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
undefined
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் ஸ்டார்க் வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய கில், 38 பந்தில் ஐந்து பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்து களத்தில் நிற்கிறார். கில்லும் புஜாராவும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்துள்ளது.
undefined
click me!