எனது எல்லாவற்றிற்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கேஎல் ராகுலுக்கு வாழ்த்து சொன்ன மனைவி அதியா ஷெட்டி!

First Published | Apr 18, 2024, 11:40 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது மனைவி இன்ஸ்டா மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

KL Rahul Birthday

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி இருவீட்டாரது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

KL Rahul and His Wife Athiya Shetty

அதியா ஷெட்டி வேறு யாருமில்லை, அவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். இவர்களது திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tap to resize

KL Rahul, IPL 2024

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக இடம் பெற்ற அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். அந்த அணியின் கேப்டனாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். அறிமுக சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

KL Rahul and Athiya Shetty

ஆனால், எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று கடந்த ஆண்டு நடந்த 16ஆவது சீசனில் 2ஆவது முறையாக விளையாடி 14 போட்டிகளில் 8ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்தது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. முதல் சீசனைப் போன்று எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறியது.

KL Rahul 32nd Birthday

தற்போது 3ஆவது சீசனில் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

KL Rahul and Athiya Shetty

இந்த நிலையில் அவரது மனைவி அதியா ஷெட்டியும் தன் பங்கிற்கு கணவர் கேஎல் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அதியா ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து என்னுடைய எல்லாமுமான என் இதயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Latest Videos

click me!