ஆசிய கோப்பை இந்தியாவுக்கு வேணுமா? இதை செய்யுங்க.. கண்டிஷன் போட்ட பாக். அமைச்சர்!

Published : Sep 30, 2025, 03:29 PM IST

Asia Cup Trophy Row: ஆசிய கோப்பை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Asia Cup Trophy Row

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து 9வது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது. போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் ACC தலைவர் மற்றும் PCB தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்துவிட்டனர். 

அவர் பாகிஸ்தான் அரசில் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்திய வீரர்கள் கோப்பையை ஏற்க மறுத்ததால் மொஹ்சின் நக்வி கோப்பையை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

24
ஆசிய கோப்பை இல்லாமல் கொண்டாடிய இந்திய வீரர்கள்

இந்திய அணி கோப்பை இல்லாமல் ஆசிய கோப்பையை கொண்டாடிவிட்டு வீடு திரும்பியுள்ளது. இந்நிலையில், கிரிக்க்பஸ்ஸின் அறிக்கையின்படி, நக்வி இப்போது கோப்பையை இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுக்கத் தயாராக உள்ளார், ஆனால் ஒரு நிபந்தனையை விதித்துள்ளார். 

அதாவது முறையான விழா ஏற்பாடு செய்யப்பட்டால் மட்டுமே சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது அணியினருக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

34
பாக் அமைச்சர் போட்ட கண்டிஷன்

மேலும், அவரே இந்திய அணியிடம் கோப்பையை வழங்குவார் என்று நக்வி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், மேலும் அவரது நிலைப்பாடு காரணமாக இந்தத் தடை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவும் அரசியல் பதட்டங்கள் மற்றும் ஆசிய கோப்பையில் இரு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடந்த சம்பவத்திற்குப் பிறகு, தனி விழா ஏற்பாடு செய்யப்படுவது சாத்தியமில்லை.

இந்திய வீரர்கள் பிஸி

மேலும், பல இந்திய வீரர்கள் விரைவில் தங்கள் அடுத்தடுத்த பணிகளில் மும்முரமாக ஈடுபடுவார்கள். ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளுக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் சுப்மன் கில் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள்.

44
எதிர்ப்பு தெரிவிக்கும் பிசிசிஐ

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது, அங்கு கோப்பை தொடர்பான சர்ச்சை விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தவுள்ளது. மேலும் நவம்பர் 24 அன்று நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை நக்வி தங்கியிருக்கும் அதே ஹோட்டலில் தான் உள்ளது. அந்த கோப்பையை துபாயின் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் உள்ள ACC அலுவலகத்திற்கு கோப்பையை வழங்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories