IND vs BAN: கடவுளே இந்தியா ஜெயிக்கணும்! மனமுருகி பிரார்த்திக்கும் பாகிஸ்தானியர்கள்! ஏன் தெரியுமா?

Published : Sep 24, 2025, 06:01 PM IST

Asia Cup 2025: India vs Bangladesh: ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் இன்றைய போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் என பாகிஸ்தானியர்கள் தங்கள் கடவுளை வேண்டி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
14
Asia Cup 2025: India vs Bangladesh

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்று விடும். இந்நிலையில், இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் ரசிகர்கள் இன்றைய போட்டியில் இந்திய அணி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என தங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

24
இந்தியா ஜெயிக்க கடவுளை வேண்டும் பாகிஸ்தான்

இதை கேட்கும்போதே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்.. எந்த அணி தோற்க வேண்டும் என்று பாகிஸ்தான் இரவும் பகலும் காத்திருந்ததோ, அதே அணி இப்போது வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பாகிஸ்தானின் இந்த வேண்டுதலுக்கு காரணம் இல்லாமல் இல்லை. சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் இருக்கும் நிலையில், இதில் 2 போட்டியில் தோற்ற இலங்கை ஏறக்குறைய வெளியேறி விட்டது.

34
பாகிஸ்தான், வங்கதேசம் இடையே போட்டி

பைனலுக்கு செல்ல மீதி 3 அணிகளுக்கு தான் போட்டி. இதிலும் இந்தியா ஏறக்குறைய பைனலுக்கு செல்வது உறுதியாகி விட்டதால் பாகிஸ்தான், வங்கதேசம் இடையே தான் போட்டியே உள்ளது. வங்கதேசம் ஏற்கெனவே இலங்கையை தோற்கடித்துள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேசம் இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணி பைனல் செல்லும் பாதை எளிதாகி விடும்.

பாகிஸ்தானின் நிலைமை சிக்கல்

மறுபக்கம் பாகிஸ்தான் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்து இலங்கையை வீழ்த்தியுள்ளது. அந்த அணிக்கு இன்னும் வங்கதேசம் கூட மட்டும் தான் மேட்ச் உள்ளது. வங்கதேசம் இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணி மிக எளிதாக பைனல் செல்லும். ரன் ரேட்டிலும் பாகிஸ்தானை முந்தி விடும். ஆகையால் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தினாலும், இந்தியா இலங்கையிடம் வீழ்ந்தால் மட்டுமே பாகிஸ்தானால் பைனல் செல்ல முடியும்.

44
பாகிஸ்தான் அணியின் விருப்பம்

இன்றைய போட்டியில் வங்கதேசம் வீழ்ந்தால் அந்த அணி பாகிஸ்தானுடன் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் பைனல் சென்று விடும். அது போக வங்கதேசத்தை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு பெரிய விஷயம் கிடையாது. இதனால் தான் இந்தியா இன்று ஜெயிக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது.

இந்தியாவுக்கு ஷாக் கொடுக்குமா வங்கதேசம்?

பாகிஸ்தானையே அசால்ட்டாக தூக்கி வீசிய இந்தியாவுக்கு வங்கதேசத்தை சாய்ப்பது அல்வா சாப்பிடுவது மாதிரி. ஆனாலும் வங்கதேசத்தை சாதாரணமாக நினைக்க முடியாது. அந்த அணி வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினால் எவ்வளவு பெரிய அணியையும் சாய்க்க முடியும். ஆகவே பாகிஸ்தானியர்களின் பிரார்த்தனை நிறைவேறுமா? இல்லை தோல்வியில் முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories