Asia cup 2025: India vs Pakistan Match: ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கான வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காடிக்கெட்டுகள் விற்பனையாகாமல் உள்ளன. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை வெறும் 57 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இரு அணிகளும் நேரடியாக மோத உள்ளன.
25
ரசிகர்கள் எதிர்பார்க்கும் போட்டி
இந்தியா, பாகிஸ்தான் மோதினாலே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது மாபெரும் விருந்தாகும். இந்த போட்டியை மைதானத்தில் நேரடியாகவும், தொலைக்காட்சிகள் மற்றும் செல்போன் வாயிலாகவும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள். ஆகவே இந்தியா, பாகிஸ்தான் போட்டி உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அதற்கான டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்கிய உடனே விற்றுத்தீர்ந்து விடும். இணையத்தில் டிக்கெட் வாங்கிய சிலர் அதை பல மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதும் உண்டு.
35
இந்தியா-பாகிஸ்தான் டிக்கெட் விற்பனை மந்தம்
வரும் 14ம் தேதி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் விளையாட உள்ள நிலையில், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையாகாமல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு டிக்கெட்டின் விலை உயர்வு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது இந்த போட்டி நடைபெறும் மைதானத்தின் VIP Suites East பகுதிக்கான இரண்டு டிக்கெட் விலை ரூ.2,57,815 ஆகும். அன்லிமிடெட் உணவு, கூலிடிரிங்ஸ் உள்ளிட்ட வசதிகள் இந்த டிக்கெட்டுக்குள் அடங்கி விடும்.
இதேபோல் Royal Box பகுதிக்கான இரண்டு டிக்கெட் விலை ரூ.2,30,700 ஆகவும், Sky Box East பகுதிக்கு இரண்டு டிக்கெட் விலை ரூ.1,67,851 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர Platinum டிக்கெட் ரூ.75,659 ஆகவும், Grand Lounge டிக்கெட் விலை ரூ.41,153 ஆகவும் உள்ளது. கடைசியாக General East பகுதிக்கான டிக்கெட் விலை ரூ.9,000 ஆக என உள்ளது. இப்படியாக குறைந்த விலை டிக்கெட்டே ரூ.9,000 என பல மடங்கு அதிகமாக உள்ளதால் ரசிகர்கள் போட்டியை பார்க்க ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
55
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
இது மட்டுமின்றி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்தியாவின் எல்லையோரங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் அந்த நாட்டுக்கு எதிராக பெரும்பாலான இந்தியர்கள் கொதிப்பில் உள்ளனர். பாகிஸ்தானுடன் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், அந்த நாட்டுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடுவது ஏன்? என பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படியாக பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதால் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை காண ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.