India vs UAE: சிக்சர் மன்னன் உள்ளே! ஸ்டார் வீரர் வெளியே! இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!

Published : Sep 10, 2025, 03:35 PM IST

ஆசிய கோப்பையில் இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் மோத உள்ள நிலையில், பிளேயிங் லெவன், துபாய் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

PREV
14
Asia Cup 2025: India vs UAE Playing 11

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக இன்று விளையாடுகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

24
சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை

இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஓய்வு பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. துணை கேப்டன் சுப்ம‌ன் கில், உலகின் நம்பர் 1 டி20 பேட்டர் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக மீண்டும் களமிறங்குகிறார். விக்கெட் கீப்பரின் பொறுப்பு ராயல் ஜிதேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அவரால் ஃபினிஷராகவும் செயல்பட முடியும். இதனால் ஸ்டார் வீரர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் போகிறது.

34
சிஎஸ்கே வீரர் ஷிவம் துபேவுக்கு இடம்

சிஎஸ்கே ஆல்ரவுண்டர் சிக்சர் மன்னன் என அழைக்கப்படும் ஷிவம் துபேவுக்கு ஆசிய கோப்பையில் பந்து வீச வாய்ப்பு வழங்கப்படும் என பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் சூசகமாகக் கூறினார். ஆகையால் ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. 

ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் இருவரும் இடம் பெறுவார்கள். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிவம் துபே, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.

44
ஒரே ஒரு டி20 போட்டியில் மோதிய அணிகள்

இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் டி20 வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் மிர்பூரில் நடந்த ஆசியக் கோப்பையின் போது நடந்த இந்த போட்டியில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்தை 81 ரன்களுக்கு மடக்கி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

துபாய் பிட்ச் எப்படி?

இந்தியா, ஐக்கிய அமீரகம் மோதும் போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த பிட்ச்சை பொறுத்தவரை நல்ல பவுன்ஸ் மற்றும் ஸ்விங் உள்ளதால் பாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஸ்பின் பவுலர்களுக்கு கைகொடுக்கும். இங்குள்ள டி20 போட்டிகளில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160-170 ஆகும். முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories