யாரையும் ஃபேவரைட்னு சொல்ல மாட்டேன். என் மனசு எப்பவும் மஞ்சள் ஜெர்சிக்காகத்தான் துடிக்கும். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த மேட்ச்ல என் மனசு CSK ஜெயிக்கணும்னு சொன்னாலும், மூளை RCB பக்கம்தான் இருக்கு. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை ஒரு மோசமான நாளாகக் கருதலாம். மோசமான வானிலை மற்றும் பிட்ச் நிலைமை அன்று அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என அஸ்வின் விளக்கினார்.
அஸ்வின் கேள்வி
தொடர் தோல்விகளுக்குப் பிறகு CSK அணியில் நடக்கும் மாற்றங்களையும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். ஜேமி ஓவர்டன், மேட் ஷார்ட்டுக்குப் பதிலாக ராகுல் சாஹர், பிரசாந்த் வீர் சேர்க்கப்பட்டதை குறிப்பிட்டு, 'இன்னும் எத்தனை மாற்றங்கள் செய்வீர்கள்?' எனக் கேட்டுள்ளார். தோனி இல்லாதது அணியின் சமநிலையை பாதிப்பதாகவும் அவர் கூறினார்.